பன்னீர் போன் ஒட்டுக்கேட்பா? : கே.பி.முனுசாமி பதில்!

public

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக கூறுவது தவறான தகவல் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் அணிகள் பெயரளவில் இணைந்தாலும் பல இடங்களில் இன்னும் இரு தரப்பாகவே செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து துணை முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பிறகு எவ்வித சலனமுமில்லாமல் அமைதியாகவே இருந்து வருகிறார்.மேலும் நூற்றாண்டு விழாக்களிலும் சரி, மற்ற நிகழ்வுகளிலும் சரி தொடர்ந்து பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், இது ஆலோசனை முதல் முக்கிய முடிவுகள் எடுப்பது வரை தொடர்வதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக டெல்லியில் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், தனக்கும், முதல்வருக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை”என்று தெரிவித்தார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமரை சந்திக்கப் போகிறார் என்ற தகவல்,சந்திப்பு உறுதியான நிலையில்தான் முதல்வருக்கு தெரிந்துள்ளது.அதன்பிறகு தமிழக பிரச்னைகள் குறித்த கோரிக்கை மனுவை குறுகிய காலத்தில் தயாரித்து பன்னீர்செல்வத்திடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையிலிருந்து தேனி வரை துணை முதல்வருடைய ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து தகவல் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் (அக்டோபர் 15)டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைந்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி,”தொண்டர்களின் ஆதரவோடு உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இரட்டை இலை எங்கள் அணிக்கே கிடைக்கும். இரட்டை இலைக்காக ஆவணங்களை போர்ஜெரியாக கொடுக்கிறார் என்றால் தினகரனை போர்ஜெரி என்றுதானே அழைக்க வேண்டும். தினகரன் குற்றச்சாட்டுக்களையெல்லாம் தாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. முதல்வர், துணை முதல்வருடன் ஆலோசனை செய்து ஒரு கூட்டு முயற்சியில் ஆட்சி வழிநடத்தப்படுகிறது.அணிகள் இணைந்ததை பிடிக்காதவர்கள் அவ்வாறு அவதூறு பரப்புகின்றனர் என்றார்.

பன்னீர்செல்வத்தின் போனை ஒட்டுக்கேட்க முதல்வர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதே என்ற கேள்விக்கு,” இது ஒரு தவறான தகவல், இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்டு என்னிடமிருந்து எதோ ஒரு பதிலை வரவைக்க விரும்புகிறீர்கள், நாட்டின் நலன் கருதி முதல்வரும், துணை முதல்வரும் செயல்பட்டு வருகிறார்கள். இனி இதுபோன்ற ஆதாரமற்ற கேள்விகளை ஊடகங்கள் கேட்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *