}தேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட்!

public

தேர்தலை மனதில் வைத்தே மத்திய அரசின் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அணியைப் பலப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவெடுத்து மக்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளார் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன். நேற்று தஞ்சை மாவட்டம் சோழபுரத்தில் தொடங்கிய பயணமானது திருப்பனந்தாள், ஆடுதுறை, திருபுவனம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்தது. இன்று (பிப்ரவரி 3) இரண்டாவது நாளாக கும்பகோணத்தில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சையிலுள்ள அண்ணா சிலைக்கு தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் சந்திப்பில் இரவு கடும் பனியிலும் பொதுமக்கள் எங்களுக்காகக் காத்திருந்து ஆதரவளித்தனர். பயணம் மாபெரும் வெற்றிபெறும். வருங்காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என்ற அவர், தான் செல்கிற இடங்களில் எல்லாம் பேருந்துக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் மக்கள் பிரதானமாக முன்வைக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

பட்ஜெட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று உள்ளாரே என்ற கேள்விக்கு, “முதல்வர் மற்றும் குறிப்பிட்ட ஐந்து அமைச்சர்களைப் பொறுத்தவரை தாங்கள் பதவியில் இருந்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்தில் உள்ளனர். மத்திய அரசைப் பகைத்துக் கொண்டால் எங்கே ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்பதும் அதற்கு ஒரு காரணம். பட்ஜெட்டைப் பொறுத்தவரைத் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேர்தலை மனதில் வைத்தே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றும் கருத்து தெரிவித்தார்.

“வரும் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலும் வரும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்ட தினகரன், கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை என்றால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகி தண்ணீர் திறக்க அனுமதி பெறுவார். ஆனால் தமிழகத்தில் வறட்சி நிலவும் இந்தச் சமயத்தில் முன்னெச்சரிக்கையாக நீதிமன்றத்தை அணுகி தண்ணீரைத் திறக்க தற்போதைய ஆட்சியாளர்கள் முயற்சி செய்யவில்லை.

இந்த விவகாரத்தில் கர்நாடக முதல்வரை சந்திப்பதற்கே அனுமதிக்காக காத்திருக்கின்றனர். இது இவர்களின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது. தற்போதைய மக்கள் விரோத அரசாங்கத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதவிக்காலத்தின் நாட்களை அதிகரிக்கவே முயற்சி செய்து வருகிறார்” என்றும் குற்றம் சாட்டினார்.

தனிக்கட்சி குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, “இதுகுறித்து நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். தற்போது பெயரில்லாமல் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் தனி அணியாகச் செயல்பட நீதிமன்றம் அனுமதியளிக்கக் கோரியுள்ளோம். எங்களுக்குக் குக்கர் சின்னம் வேண்டும் என்றும் நாங்கள் கோரியுள்ளோம்” என்றும் தெரிவித்தார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *