க்ரோம் ஆஃப் லான்சர் நிறுத்தப்படுகிறது – கூகுள்

public

சமீபகாலமாக கூகுள் தனக்கு தேவையற்ற சேவைகளை நிறுத்தி வருகிறது. கூகுள் லேப்ஸ், கூகுள் டிக்‌ஷனரி, பிகாசா, கூகுள் ரீடர், ஆர்க்குட் உட்பட பல சேவைகளின் வரிசையில், க்ரோம் ஆஃப் லான்சரும் சேர்ந்திருக்கிறது. பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் இணைய ப்ரவுசராக க்ரோம் உள்ளது. இதில் ஒரு பகுதிதான் க்ரோம் ஆஃப் லான்சர். உதாரணமாக, ஜிமெயில், யூட்யூப் உள்ளிட்டவற்றை க்ரோம் ப்ரவுசருக்கு செல்லாமலேயே, க்ரோம் ஆஃப் லான்சர் மூலம் எளிதாகத் திறக்க முடியும். ஆனால், பலரும் இந்த சேவையை பயன்படுத்தாமல் இருப்பதால், இந்த சேவையை நிறுத்திக் கொள்ள இருப்பதாக கூகுள் அறிவித்திருக்கிறது. மேலும், க்ரோம் ப்ரவுசரை மேலும் எளிதாக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது கூகுள்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *