:குட்கா: சிபிஐ எப்ஐஆர்!

public

குட்கா முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

குட்கா ஊழல் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை சிபிஐக்கு மாற்றிக் கடந்த மாதம் உத்தரவிட்டது. எனவே இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பதவி விலக வேண்டுமெனப் பல்வேறு கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர். விசாரணையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஜெ.அன்பழகன் மனுவும் அளித்திருந்தார்.

விசாரணையை சிபிஐக்கு மாற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சூழ்நிலையில் குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ இன்று (மே 30) முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.

குட்கா விவகாரம் குறித்து தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்து முதல் தகவல் அறிக்கை ஆவணத்தைப் பெற்ற டெல்லி சிபிஐயின் லஞ்ச மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய கலால் துறை அதிகாரிகள், தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் மீது ஐபிசி 120-பி சட்டப்பிரிவின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் (1988) கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தருமாறு தமிழக அரசிடம் டெல்லி சிபிஐ கேட்டிருப்பதால் அந்த ஆவணங்கள் கைமாறியதும் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *