12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி: ஐநாவில் மோடி

politics

ஐ.நா. பொது அவையில் உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி, தன் உரையை முடித்துவிட்டு மூன்று நாள் அமெரிக்க பயணத்தை நிறைவு செய்துகொண்டு இந்தியா திரும்பினார்.

ஐ.நா. பொது அவையில் இந்திய நேரப்படி நேற்று (செப்டம்பர் 25)மாலை உரையாற்றினார் பிரதமர்.

இந்த ஆண்டின் பொது விவாதத்தின் கருப்பொருள் ‘கொரோனாவில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை உருவாக்குதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், ஐக்கிய நாடுகள் சபையை புத்துயிர் பெறுதல்” என்பதாக வழங்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் பேசினார் பிரதமர் மோடி.

அனைத்து ஜனநாயக நாடுகளின் தாய் என்று அழைக்கப்படும் இந்தியாவை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்,” என்று தொடங்கியமோடி, ”இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டில் நுழைந்துள்ளது, ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜனநாயக மரபுகளைக் கொண்டுள்ளது. எங்கள் பன்முகத்தன்மை என்பது நமது வலுவான ஜனநாயகத்தின் அடையாளமாகும். ஏராளமான மொழிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பேச்சுவழக்குகள் துடிப்பான ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டுகள். ஒரு காலத்தில் டீக்கடையில் தனது தந்தைக்கு உதவி செய்த ஒரு சிறு குழந்தை இன்று ஐநா பொதுச்சபையில் இந்தியாவை அதன் பிரதமராக பிரதிநிதித்துவப்படுத்துவது இந்திய ஜனநாயகத்தின் பலம்”என்று தனது டீ விற்ற ஃப்ளாஷ்பேக்கையும் குறிப்பிட்டார் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் சாணக்கியரை மேற்கோள் காட்டினார். “இந்தியாவின் சிறந்த இராஜதந்திரியான சாணக்கியர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறினார்- சரியான வேலை சரியான நேரத்தில் செய்யப்படாவிட்டால், நேரம் மட்டுமே அந்த வேலையின் வெற்றியை அழிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை தன்னைப் பொருத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றால், அது அதன் செயல்திறனை மேம்படுத்த வேண்டும், அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். உலகளாவிய ஒழுங்கு, உலகளாவிய சட்டங்கள் மற்றும் உலகளாவிய மதிப்புகளை பாதுகாக்க ஐ.நா.வை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

கொரோனா பற்றி குறிப்பிட்ட மோடி, “12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொடுக்கக்கூடிய உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது. மனிதகுலத்திற்கான பொறுப்பைப் புரிந்துகொண்ட அதே வேளையில், இந்தியா மீண்டும் தடுப்பூசிகளைத் தேவைப்படுவோருக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, மனிதகுலம் வாழ்நாளில் ஒருமுறை உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடிய எங்கள் பகிரப்பட்ட அனுபவம் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது – நாங்கள் ஒன்றாக இருக்கும்போது வலிமையாகவும் சிறப்பாகவும் இருக்கிறோம்.

தொற்றுநோயை தோற்கடிக்க கோவிட் -19 வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் தங்களால் முடிந்ததை வழங்கியபோது இந்த கூட்டு மனப்பான்மையை உலகம் பார்த்தது”என்றும் குறிப்பிட்டார் மோடி.

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *