12 மாத பேறுகால விடுப்பு, சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி!

politics

3P

பெண்களுக்கு 12 மாதம் பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதில்,

243. அரசுப் பணிக்குச் செல்லும் பெண்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் 9 மாத பேறுகால விடுமுறையை 12 மாதங்களாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

**சிறப்பு தாய்சேய் நலத் திட்டம்**

244. திருமணமான பெண்கள் கருவுற்ற முதல் மாதம் மட்டும் மருத்துவமனைக்குச் சென்று, தடுப்பூசி பரிசோதனை செய்து கொண்டு மீதமுள்ள மாதங்களில் தாய்மார்களுக்குத் தடுப்பூசி அளிக்கவும் பரிசோதனை செய்து கொள்ளவும் தாய்சேய் நல வாகனம் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டு, பரிசோதனைக் கருவிகள் கொண்ட அந்த வாகனத்தில் பெண் மருத்துவர் ஒருவரும், செவிலியர் ஒருவரும் கருவுற்ற பெண்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ உதவிகள் வழங்குவர். பரிசோதனைக் கருவிகள், மருந்து மாத்திரைகள் அனைத்தும் வீடு தேடிவரும் வசதியான தாய்சேய் நலத் திட்டம்” உடனடியாகச் செயல்படுத்தப்படும். இந்தச் சிறப்புத் திட்டம் முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் செயல்படுத்தப்படும்.

245. அனைத்துப் பொது இடங்களிலும், தாய்மார்கள் தம் குழந்தைக்குப் பாலூட்டுவதற்குத் தனி இடவசதி ஏற்பாடு செய்யப்படும்.

246. தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் நியமனத்தில் பெண்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்று முந்தைய தி.மு.கழக ஆட்சியில் அறிவித்து, பின்னர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் காரணமாகத் தற்போது 75 சதவிகித விழுக்காடு நியமனம் பெண்களுக்கே அளிக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் தற்போது பெண்களுக்கு வழங்கப்படுகின்ற 30 விழுக்காடு இடஒதுக்கீடு முன்னுரிமை அடிப்படையில் 40 விழுக்காடாக உயர்த்தப்படும்.

247. சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டும் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளது. இந்தச் சட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டுமெனத் தி.மு.கழகம் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தும்.

**மகளிர்க்குப் புற்றுநோய்ச் சோதனைகள்**

248. பெண்களுக்கிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பெண்களை அதிகமாகப் பாதிக்கக் கூடிய வாய்ப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் ஆகியவைகளுக்கான பரிசோதனைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செய்யப்பட்டு, உரிய உயர் மருத்துவ சிகிச்சைஅளிக்கப்பட ஆவன செய்யப்படும்.

249. தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிலிருந்து பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட, பணிபுரியும் இடங்களில் சட்டப்படி அமைக்கப்பட வேண்டிய பாதுகாப்புக் குழுக்களை முறையாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கைம்பெண்கள் நலன்

250. தமிழகத்தில் கைம்பெண்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக உள்ளது. கைம்பெண்களின் பிரச்சினைகள் குறித்துப் பலமுறை கோரிக்கைகள் அளிக்கப்பட்டும் அ.தி.மு.க அரசு செவிசாய்க்கவில்லை. கைம்பெண்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு அளித்தல் மற்றும் அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உரிய உத்திரவாதம் அளித்தல் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் 35 வயதுக்கு மேற்பட்ட கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கைம் பெண்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

251. கைம்பெண்கள் முன்னேற்றத்திற்காகக் கைம்பெண் மகளிர் நல வாரியம் அமைக்கப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 24,000 வழங்கப்படும்.

252. டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ், பேறு காலத்தில மகளிர் உடல்நலம் பேணுவதற்காகத் தற்போது வழங்கப்படும் உதவித் தொகை 18 ஆயிரம் ரூபாய் என்பது 8 மாதத்திற்கு, மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 24 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும்.

253. மாவட்டந்தோறும், பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும். பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் களைய சைபர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

254. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருவாரியாக இணைய வழித் தகவல் பரிமாற்றங்களின் மூலம்தான் நடைபெறுகிறது. இதனைத் தடுப்பதற்குத் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சைபர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். இந்தப் பணிக்கெனத் தகவல் தொழில்நுட்பக் கல்வி பெற்றவர்களுக்கு, உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு, காவல் நிலையங்களில் நியமிக்கப்படுவர்.

255.ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை கைம்பெண்களின் மகள் திருமண நிதி உதவித் திட்டத்தில் தற்போது வழங்கப்படும் உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாய் என்பது 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். .அத்துடன், தாலிக்கு 8 கிராம் (22 கேரட்) தங்கமும் வழங்கப்படும்.

பட்டப்படிப்பு படித்த அல்லது பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்குத் திருமண உதவித் தொகையாகத் தற்போது வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபாய் என்பது 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன், தாலிக்கு 8 கிராம்(22 கேரட்) தங்கமும் வழங்கப்படும்.

256.அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற மகளிர் திருமண நிதி உதவித் திட்டத்தில் தற்போதுவழங்கப்படும் உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாய் என்பது 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன், தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும். பட்டப்படிப்பு படித்த அல்லது பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்குத் திருமண உதவித் தொகையாகத் தற்போது வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபாய் என்பது 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன், தாலிக்கு 8 கிராம் (22 கேரட்) தங்கமும் வழங்கப்படும்.

257.மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதிஉதவித் திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்குத் திருமணஉதவித் தொகையாகத் தற்போது வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் என்பது 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன், தாலிக்கு 8 கிராம் (22 கேரட்) தங்கமும் வழங்கப்படும்.ஐந்தாம் வகுப்பு வரை படித்த ஆதி திராவிடர் மற்றும் மலைவாழ் இனஏழைப் பெண்களுக்குத் திருமண உதவித் தொகையாகத் தற்போது வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் என்பது 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன், தாலிக்கு 8 கிராம் (22 கேரட்) தங்கமும் வழங்கப்படும்.பட்டப்படிப்பு படித்த மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்குத் திருமண உதவித் தொகையாகத் தற்போது வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபாய் என்பது 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன், தாலிக்கு 8 கிராம் (22 கேரட்) தங்கமும் வழங்கப்படும்.

258.டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டத்தின் கீழ்,தற்போது வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் என்பது 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன், தாலிக்கு 8 கிராம் (22 கேரட்) தங்கமும் வழங்கப்படும். பட்டப்படிப்பு படித்த மற்றும் பட்டயப் படிப்பு படித்த விதவைப் பெண்களுக்குத்திருமண உதவித் தொகையாகத் தற்போது வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபாய் என்பது 60 ஆயிரம்ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன், தாலிக்கு 8 கிராம் (22 கேரட்) தங்கமும் வழங்கப்படும். அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்

259.கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான சாதி இன வேறுபாட்டைஅகற்றி தீண்டாமையை ஒழிக்கும் நோக்கத்தில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் புதுப்பிக்கப்பட்டுச் செயல்படுத்த அரசாணை வெளியிடப்படும்.கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில் அவர் பிற இனத்தவரை மணந்து கொண்டால் வழங்கப்படும் நிதியுதவி 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு 8 கிராம் (22 கேரட்) தங்கக் காசும் வழங்கப்படும்.

260.அரசு கொள்முதல் செய்து பயன்படுத்தும்,மற்றும் விநியோகித்திடும், அரசு அலுவலகங்களுக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்யும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளுக்குக் கொள்முதலில் முன்னுரிமை வழங்கப்படும். அந்தப் பொருட்களை உற்பத்தி செய்யும் உபகரணங்களை வாங்குவதற்குத் தேவைப்படும் மொத்தத் தொகையில் சுயஉதவிக் குழுக்கள் பத்து விழுக்காடு செலுத்தினால், அரசு மானியமாக 25 விழுக்காடு வழங்கி மீதித் தொகையினை வங்கியில் கடனாகப் பெற உதவும்.

1 லட்சம் மகளிர்க்கு சிறுதொழில் கடன்

261.வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களைச் சார்ந்த 1 லட்சம் கிராமப்புறப் பெண்களுக்குக் கால்நடைகள் வளர்ப்பு, மீன் பிடித்தல், வண்ண மீன் வளர்ப்பு, மண் பானைகள் செய்தல் போன்ற விவசாயம் சார்ந்த சிறிய தொழில்கள் மற்றும் வணிகம் செய்வதற்கு வட்டியில்லாக் கடனாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

262. 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத, ஆதரவற்ற மகளிர்க்கு அவர்களுடைய கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

**சுயஉதவிக் குழுக்கள்**

263. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்று தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த பிறகு அ.தி.மு.க. அரசு அதே அறிவிப்பைச் செய்தது. ஆனால், தேர்தல் அறிவிக்கை வெளிவந்த நிலையில்அவர்களால் அதனை முறையாகச் செய்ய இயல்பில்லை. எனவே, கழக ஆட்சி அமைந்தவுடன்இக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மேலும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் பூமாலை திட்டம் செம்மைப்படுத்தப்படும்.

264.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலின் போதே கூட்டுறவுவங்கிகளில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனஅறிவித்திருந்தார். இதே அறிவிப்பை சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சில மணி நேரங்களுக்கு முன்பு தேர்தல் ஆதாயத்திற்காக அதிமுக அரசு அறிவித்தது. அதனை அமல்படுத்தமுடியவில்லை. எனவே, கழக அரசு அமைந்ததும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.மகளிர் சுய உதவிக் குழுக்கள் போலவே வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்காகச் சுய உதவிக் குழுக்கள் புதிதாகத் தொடங்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன்

265.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் தமிழகத்தில் நடத்திய பேரியக்கத்தின் காரணமாகவும் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் கொடுத்த அழுத்தத்தினாலும் – பண்டித நேரு அவர்கள் முன்வந்து இந்திய அரசியல்சட்டத்தில் 1951 ஆம் ஆண்டு நிறைவேற்றிய முதலாவது திருத்தத்தின் மூலம், இணைக்கப்பட்ட 15(4) என்ற புதிய பிரிவில், சமூகநிலையிலும், கல்விநிலையிலும் என்ற சொற்றொடர் மட்டும்தான் இணைக்கப்பட்டது. அப்போது சிலர் பொருளாதார ரீதியாக என்ற சொற்றொடரும் இடம்பெற வேண்டுமென்று வலியுறுத்தியும், அதனைப் பண்டிதநேரு அவர்களோ, அன்றைய சட்ட அமைச்சர் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களோ, ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்தச் சூழ்நிலையில், தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நிலுவையில்உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பை நீக்குவதற்கு மத்திய அரசு உரியவழிமுறைகளை ஆய்வு செய்து சட்டரீதியாக அதனை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுத்திடத் தி.மு.கழகம் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும்.

**வருமான உச்ச வரம்பு ரூபாய் 25 லட்சமாக உயர்த்துக**

266.சாதிகள் அற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது தி.மு.கழகத்தின் கொள்கையாகஇருந்தாலும், சாதிகள் உள்ள வரையில் இடஒதுக்கீடு தொடரவேண்டும் என்பதும், தி.மு.கழகத்தின் கொள்கையாகும். அதைப்போல, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டிற்குத் தடையாகப் பொருளாதார உச்சவரம்பு கூடாது என்பதுதான் தி.மு.கழகத்தின் கொள்கையாகும். அதே வேளையில், பொருளாதார உச்சவரம்பு தொடரும் வரையில், தற்போதுள்ள வருமான உச்சவரம்பு 8.5 இலட்சம் ரூபாய் என்பதைத் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி ஆண்டு வருமானம் (ஊதியம் மற்றும் வேளாண் வருமானம் தவிர்த்து) 25 இலட்சம் ரூபாய் என உயர்த்த வேண்டுமென்று தி.மு.கழகம் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேசிய ஆதி திராவிடர் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் வழங்கப்படவேண்டும் எனத் தி.மு.கழகம் வலியுறுத்தும்.

267. அந்தந்த மாநிலங்களில் வாழும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் எண்ணிக்கைக்கேற்ப இடஒதுக்கீட்டு அளவை அந்தந்த மாநிலங்களே நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட மத்திய அரசைத் தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.

268.தி.மு.கழகத்தின் அடிப்படைக் கொள்கையான இடஒதுக்கீட்டினை அனைத்து இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தும் வகையில் ‘மண்டல் குழுவின்’ பரிந்துரையினை ஏற்றுக்கொள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் அன்றைய பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கான அறிவிப்பினைச் செய்தார்கள். அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அன்றைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.அர்ஜுன் சிங் அவர்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினார்.

ஆனால், இன்றளவில் மத்திய அரசுப் பணிகளிலோ, மத்திய கல்வி நிறுவனங்களிலோ, இட ஒதுக்கீடு முழுமையாகப் பின்பிற்றப் படாமல், மிகக் குறைவான இடங்களே, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டிருப்பது, அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள பெரும் அநீதியாகும்.

சமுதாயத்தில் நீண்டகாலம் பணி வாய்ப்பின்றி, கல்வியின்றி இருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றளவில் முன்னேறி இருப்பதற்கு அடிப்படைக் காரணமாக இட ஒதுக்கீடு அமைந்துள்ளது.

ஆனால், மத்திய அரசு இந்த இட ஒதுக்கீட்டு முறையை வேண்டுமென்றே முறையாகக் கடைப்பிடிக்காமல், மனுதர்ம சிந்தனையோடு நடந்து கொள்வது கடுமையான கண்டனத்துக்குரியதாகும்.

எனவே, மத்திய அரசுப் பணியிடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் மண்டல் ஆணையப்பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தி.மு.கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளும்.

**தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்கிடுக**

269.தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தனியார் துறையிலும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமெனப் பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் இடஒதுக்கீடு முறைப்படி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மற்றும் பழங்குடி சமுதாய மக்களுக்குத் தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்துவோம்.

270. சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்ட 112 ஆண்டுகளில் நடைபெறாத ஓர் அதிசயமாகத் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் 14.2.1973 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக தாழ்த்தப்பட்ட பட்டியலின வகுப்பைச் சார்ந்த ஏ.வரதராசன் நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதும் தி.மு.கழகஆட்சியின் பரிந்துரையால்தான். அதன்மூலம் முதல்முறையாக உச்சநீதிமன்றத்தில் பட்டியலின வகுப்பைச் சார்ந்த ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பெருமையும் தி.மு.கழகத்தால்தான் உருவானது.

நீதிபதிகள் நியமனங்களில் கீழமை நீதிமன்றங்களில் தற்போது இடஒதுக்கீடு உள்ளது. ஆனால், உயர் நீதிமன்றங்களிலும், உச்சநீதி மன்றங்களிலும் இடஒதுக்கீடு நடைமுறையில் இல்லை. தமிழ்நாட்டைத் தவிர பிற மாநில உயர் நீதிமன்றங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு ஏறத்தாழ 400 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளித்திடும் வகையில் மத்திய அரசு உரிய சட்டம் ஒன்றை நிறைவேற்ற தி.மு.கழகம் வலியுறுத்தும்.

271.ஆதிதிராவிட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நாடாளுமன்றத்தில் விவாதித்து, ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோரைப் பற்றி மட்டும் கணக்கெடுப்பு நடத்தியது. எனினும் இந்தக் கணக்கெடுப்பைத் தி.மு.கழக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியும் அதனை மத்திய அரசு வெளியிடவில்லை. உடனடியாக அதனை வெளியிட வேண்டுமென தி.மு.கழகம், மத்திய அரசை வலியுறுத்தும். வறுமைக் கோட்டிற்கான அளவுகோல் அடிக்கடி மாறக் கூடியது. எனவே, முழுமையான சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பினை நடத்திடத் தி.மு.கழகம் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தும்.

272.மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி போன்ற அனைத்துக் கல்வி நிலையங்களின் மாணவர்சேர்க்கையிலும் ஆசிரியர் நியமனத்திலும் மண்டல் குழுவின் பரிந்துரையின்படிபிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென மத்திய அரசைத் தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.

273.விசுவகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட வைக்கப்பட்டுள்ள கோரிக்கை கவனத்துடன் பரிசீலித்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

274.இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அறங்காவலர் குழுவில் விசுவகர்மா இனத்தைச் சேர்ந்த ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்படுவார்.

**ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலன்**

275.தி.மு.கழக ஆட்சி அமையும் போதெல்லாம் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலன் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீட்டின் பங்கினை நடைமுறைப்படுத்திப் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பிவரும் அணுகுமுறை அ.தி.மு.க ஆட்சியில் நிறுத்தப்பட்டுவிட்டது. தி.மு.கழக ஆட்சி அமைந்ததும் மீண்டும் பின்னடைவு காலிப் பணியிடங்கள் கணக்கிடப்படும் நிரப்பப்படும்.

276. கிராமங்களில் வசிக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் முதல் தலைமுறை பெண் வாரிசு மருத்துவம் அல்லது பொறியியல் துறையில் படிக்கத் தகுதி பெற்றால் அரசுக் கல்லூரிகளில் அரசு செலவில் கல்வியும் மற்றும் தங்கும் விடுதி வசதியும் செய்து தரப்படும்.

அது போலவே, இத்திட்டத்தில் முன்னேறிய வகுப்பைச் சார்ந்தவர் ஆதி திராவிடர்மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவரைத் திருமணம் செய்திருந்தால் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்.

277.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக மத்திய அரசு உதவியுடன் 1980-1981 ஆம் நிதியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சிறப்புக்கூறு திட்டம் அ.தி.மு.க அரசினால் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை. இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்தி அதன் முழுப் பலன்களும் அச்சமுதாய மக்களுக்கு உரிய காலத்தில் சேர்வதற்குரிய நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும்.

278.ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளின் கட்டமைப்புவசதிகள் மேம்படுத்தப்படும். இம்மாணவர்களுக்கு உணவுக்காக வழங்கப்படும் உணவுக் கட்டணம் விலைவாசி உயர்வுக்கேற்றவாறு அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு உயர்த்தி வழங்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

279.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திரக் கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.

280. நரிக்குறவர், குருவிக்காரர், வேட்டைக்காரர், லம்பாடி, படுகர் போன்ற சமுதாயத்தினர் 15 லட்சம்பேர் பயனடைய பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.

மேலும், இராமநாதபுரம், கடலூர், தேனி போன்ற மாவட்டங்களில் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் வசிக்கும் இந்து கணிக்கர், இருளர் போன்ற சமுதாய மக்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, இந்தச் சமுதாய மக்கள் எந்த மாவட்டத்தில் வசித்தாலும் உரிய விசாரணைக்குப்பின் சாதிச் சான்றிதழ் பெற்றிட வழிவகை செய்யப்படும்.

பழங்குடி மக்கள் சாதிச் சான்றிதழ் பெறுவதில் உள்ள தடைகள் அகற்றப்பட்டு விண்ணப்பித்த 100 நாட்களுக்குள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

**தூய்மைப் பணியாளர் நலன்**

281. தற்போதுள்ள 50 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட சிறு நகரங்கள், ஏனைய நகரங்கள் மற்றும் மாநகரங்களில் திறந்த வெளி சாக்கடைகளை அகற்றுவதற்காகப் பாதாள சாக்கடைத் திட்டமும், திடக் கழிவு மேலாண்மைத் திட்டமும் முன்னுரிமை தரப்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். இதன் மூலமாகத் தலைமுறை தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளருக்குப் பணி விடுதலையும் மாற்று வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

282. வாரம் ஒருநாள் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். அப்படி விடுமுறை நாட்களில் பணிபுரிய நேரிட்டால் கூடுதல் பணிநேர ஊதியம்வழங்கப்படும்.

283.தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிர் இழக்க நேரிட்டால், அவருடைய வாரிசுதாரர்களுக்குக் கல்வித் தகுதியின் அடிப்படையில் உடனடியாக அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

284.தூய்மைப் பணியாளர் பணியில் இருக்கும்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால், அதே துறையில் காலியாக உள்ள பதவிகளில் கல்வித் தகுதிக்கேற்ற பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

285. ஊராட்சிகள், அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மாணவர் விடுதிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகள் ஆகியவற்றில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்.

**சிறுபான்மையினர் நலன்**

286.தி.மு.க ஆட்சிக் காலத்தில் பௌத்த மதத்தைத் தழுவிய தலித் மக்களுக்கு ஆதி திராவிடர் பெறுகிற அனைத்துச் சலுகைகளும், உரிமைகளும் அளிக்கப்பட்டது போல், தலித் கிருத்துவர்களும் ஆதி திராவிடர் பட்டியலில் இடம் பெறுவதற்கும், இது குறித்து நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைந்த ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கும் மத்திய அரசைத் தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.

287.கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மைச் சமுதாயத்தினர் உரிய பங்கினைப் பெறுவதற்கு ஏதுவாக நீதியரசர் சச்சார் ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசைத் தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.

288.மாநிலத்தில் சிறுபான்மையினர் கல்வி அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் பின்தங்கியுள்ள பகுதிகளில் குறிப்பாக, சிறுபான்மைச் சமுதாயப் பெண்கள் பயனடையும் வகையில் சிறப்புச் சலுகைகளுடன் கல்வி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

289. வக்ஃப் வாரியத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

**மாற்றுத்திறனாளிகள் நலன்**

290.மாற்றுத் திறனாளிகள் சட்டம் (1995) ன் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான கொள்கைகளை உருவாக்கவும், அவற்றைச் செயல்படுத்துவதைக் கண்காணிக்கவும், மாநிலங்கள் தோறும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். ஆனால், சட்டப்படியான இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் குழு அமைக்கப்படவில்லை. தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுவதோடு, அரசு வழங்கும் சலுகைகளை அதிகமானவர்கள் பெற்றுப் பயனடையும் வகையில் மாற்றுத் திறனாளிகள் சலுகைக்கான குறைபாடுகளை 60 சதவிகித்திலிருந்து 40 சதவிகிதமாகக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

291.மாற்றுத் திறனாளிகளுக்கும், அவர்களுடன் செல்லும் ஓர் உதவியாளருக்கும் தமிழக அரசின் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை வழங்கப்படும்.

292. மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு அட்டை வழங்கப்படும்.

293. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும்.

294.மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் உள்ள 4 சதவிகித இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

295. அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் போன்ற அனைத்துப் பொது இடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்குப் பயன்படும் வகையில் சாய்தள (சுஹஆஞ) வசதிகளும், கழிப்பறை வசதிகளும் செய்து தரப்படும்.

296.மாற்றுத் திறனாளிகளுக்குச் சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு அரசுத் தொழிற் பயிற்சி நிறுவனங்களில் (ஐகூஐ) பயிற்சி வழங்கப்பட்டுத் தொழில் தொடங்கிட மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும்.

297. அரசு வீட்டு வசதி மற்றும் குடிசைமாற்று வாரிய வீடுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

**வணிகர் நலன்**

298. கந்துவட்டிக் கொடுமையிலிருந்து ஏழை எளிய வணிகர்களைக் காப்பாற்றிட சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும், தலைச்சுமைகளிலும் காய்கறிகள், மீன் விற்பவர்கள், பூ விற்பவர்கள், பழம் விற்பவர்கள், சலவைத் தொழிலாளர்கள், காலணி தயாரிக்கும் தொழிலாளர்கள், தேநீர் விற்பவர்கள், பழரசம் விற்பவர்கள், இளநீர் விற்பவர்கள், பஞ்சர் ஒட்டும் தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு வாரத் தவணைமுறையில் திருப்பிச் செலுத்தும் வகையில் வட்டியில்லாக் கடன் 15,000 ரூபாய் வரையில் எளியமுறையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், இவர்களது நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து நகரங்களிலும் உள்ளாட்சிநிர்வாகம், காவல்துறை, வணிகர் சங்கங்கள், குடியிருப்போர் பிரதிநிதிகள் அடங்கிய ஒழுங்குபடுத்தும் குழு ஒன்று அமைக்கப்படும். சிறு வியாபாரிகளுக்கான வணிகர் சுய உதவிக் குழுக்கள் அமைத்துத் தரப்படும்.

கிராமப்புறத்தில் வாரச்சந்தை, திருவிழா, தெருவோரங்களில், நடமாடும் கடைகள் அமைக்கும் சிறு வணிகர்களிடமும் உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து செய்யப்படும்.

299. சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பதால் இலட்சக்கணக்கான சிறு வணிகர்களும் அதனை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசு இதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்திய நேரத்தில் மாநில அரசுகளின் அனுமதியின்றி மாநிலங்களில் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படமாட்டாது என்று தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதி அளித்ததோடு அதற்கான சட்டதிருத்தத்தையும் மேற்கொண்டது. எனவே, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுகளைத் தி.மு.கழக அரசு எந்த நிலையிலும் அனுமதிக்காது.

300. வணிக வரி அதிகாரிகள் விதிக்கின்ற உத்தேச வரி விதிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வணிகர்கள் 25 சதவிகித வரிவிதிப்புத் தொகையைச் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையைத் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பன்மடங்கு உயர்த்தப்பட்ட நகராட்சிகள் கடை வாடகைகள் மறு ஆய்வு

301.மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சொந்தமானச் கடைகளுக்கு அ.தி.மு.க. அரசு வாடகைத் தொகையை அபரிமிதமாக பின் தேதியிட்டு உயர்த்தியுள்ளது. இதனால் பல தரப்பட்ட வணிகர்களும் இந்த கட்டண உயர்வை செலுத்த முடியாமல் அல்லல்படுகின்றனர். இவர்களுக்கு உரிய நிவாரணம் அளித்திடும் நோக்கில், முன்பு முத்தமிழறிஞர் கலைஞர் அரசு செய்தது போல், அநியாய கட்டண உயர்வு உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு புதிய கட்டண விகிதங்கள் விதிக்கப்படும்.

302.வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை செம்மைப்படுத்தப்பட்டுத் திறம்படச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

303.மத்திய அரசு சிறு தொழில் பட்டியலிலிருந்து நீக்கியுள்ள தீப்பெட்டி, பட்டாசு, மெழுகுவர்த்தி தயாரித்தல் உள்ளிட்ட 21 பொருள்களை மீண்டும் அப்பட்டியலில் சேர்க்க ஆவன செய்யப்படும்.

304. மதுரை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு ஆகிய நகரங்களில் வர்த்தக மேம்பாட்டை உறுதி செய்ய வர்த்தக மையங்கள் அமைக்கப்படும்.

305.நலிந்து வரும் உப்பு உற்பத்தி, வெள்ளிக் கொலுசு தயாரிப்பு, பித்தளைத் தொழில், வெள்ளி விளக்குகள் செய்யும் தொழில், பாத்திரத் தொழில் ஆகியவற்றைக் குடிசைத் தொழில்களாக அறிவித்து அவை மேம்படத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

306.பெண்களுக்கு அதிக அளவில் வேலை வழங்கிவரும் பட்டாசுத் திரிதொழில் உரிய பாதுகாப்புடன் கூடிய குடிசைத் தொழிலாக அறிவிக்கப்படும்.

307. இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தமிழ்நாட்டில் தடை செய்ய தேவையான முயற்சிகள் எடுக்கப்படும்.

**ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் நலன்**

308. மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 80-வயது நிறைந்தவுடன் 20 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி 70-வயது நிறையும் பொழுது 10 சதவிகிதமும், 80-வயது நிறையும் பொழுது மேலும் 10 சதவிகிதமும் ஓய்வூதியம் வழங்கப்படும்.

பழைய ஓய்வூதியத் திட்டம்

309. புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.

310.தமிழக அரசு அலுவலர்களின் பணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க மாநில நிர்வாகத் தீர்ப்பாயமும் தலைமைச் செயலாளர் / துறைச் செயலாளர் / துறைத் தலைவர் தலைமையிலான கூட்டு ஆலோசனைக் குழுக்களும் மீண்டும் அமைக்கப்படும்.

சம வேலைக்கு சம ஊதியம்

311. ரூ.8000/ அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அ.தி.மு.க. ஆட்சியில் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அத்தகைய 20,000 ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கழக ஆட்சி, அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலமுறை ஊதியம் வழங்கும். ஆசிரியர் பணிக்காலத்தில் உயர்கல்வி கற்று பட்டம் பெறும் ஆசிரியர்களுக்கு கழக ஆட்சியில் அறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்து வழங்கி வந்த ஊக்கத்தொகை அ.தி.மு.க அரசினால் நீக்கப்பட்டுவிட்டது. இந்த ஊக்கத்தொகை மீண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம்

312. பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மீது 17க்ஷ பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஊதிய உயர்வு, மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்குக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்குப் பாதிப்பிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யப்படும்.

அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் பணி நியமனக் கோரிக்கை

313.தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும். அவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும் பணிக்கொடையும் வழங்கப்படும்.

314. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பணிக் காலத்தில் இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்குத் தற்போது வழங்கப்பட்டுவரும் குடும்ப நலநிதி ரூபாய் 3 இலட்சம் என்பது 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

315.அ.தி.மு.க அரசினால் பழிவாங்கும் நோக்கத்தில் வேலைநீக்கம் செய்யப்பட்ட மக்கள்நலப் பணியாளர்கள் இயற்கை எய்தியிருந்தால் அவர்களது வாரிசுக்கு அரசு வேலை வழங்குவதோடு, குடும்ப நிவாரண நிதியாக 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

316.பள்ளிக்கல்வித் துறையில் பகுதி நேரப் பணியாளர்களாகப் பணிபுரிந்து நிரந்தரமாக்கப்பட்ட தொழிற் கல்வி ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் 50 விழுக்காடு பகுதிநேரப் பணிக் காலத்தை ஓய்வூதியம் நிர்ணயிப்பதற்குக் கணக்கில் எடுத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

317.கதர் கிராமத் தொழில் வாரியத் தொழிலாளர்கள், சுகாதாரத் துறையில் பணியமர்த்தப்பட்ட கொசு ஒழிப்புப் பரிசோதகர்கள், வேளாண்மை விதை சுத்திகரிப்பு நிலையத் தொழிலாளர்கள் போன்றோரின் பணி மற்றும் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய முறையில் நிறைவேற்றப்படும்.

318.அரசுப் பணியாளருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குடும்ப மருத்துவச் செலவு வரம்பை உயர்த்துவதுடன், அறுவை சிகிச்சைக்கு மட்டுமின்றித் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக (ஐn-ஞயவநைவே) சேர்ந்து சிகிச்சை பெறும் அனைத்து வகையான மருத்துவ செலவினங்களும் அடங்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மாற்றியமைக்கப்படும்.

**கோயில் பணியாளர்கள் ஓய்வூதியம்**

319.கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்குக் கோயில்களின் நிதியிலிருந்து வழங்கப்படும் ஓய்வூதியம் 5000 ரூபாய் என்பதை உயர்த்தி வழங்குவது குறித்தும், அவர்களுக்குப் பொங்கல்போனஸ் வழங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

**திருநங்கையர் நலன்**

320.தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை ஈட்ட இயலாத திருநங்கையருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 1000 ரூபாய் என்பது 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

321.திருநங்கையரின் தேவைக்கேற்பக் குடிசைமாற்று வாரியம் வாயிலாக வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

**முதியோர் நலன்**

322.தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் அனைத்து முதியோருக்கும் வழங்கப்பட்ட உதவித் தொகை அ.தி.மு.க ஆட்சியில் நிறுத்தப்பட்டுவிட்டது. தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் தகுதியுள்ள முதியோர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் வழங்கப்படும் 1000 ரூபாய் உதவித்தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அந்த உதவித் தொகையை அஞ்சல்துறை மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

323.ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட்டு, ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், வழங்க உரிய திட்டம் வகுக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும். மாவட்டந்தோறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசுத்துறை, தனியார் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

324.அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பெரிய சிறிய கோயில்களிலும் மூத்த குடிமக்களுக்குக் காலையிலும் மாலையிலும் ஒரு மணிநேரம் தனி வரிசையில் தரிசனம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

325.அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான நவீன வசதிகள் கொண்ட முதியோர் வார்டுகள் அமைக்கப்படும்�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *