எழுவர் விடுதலை: சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் புதிய தகவல்!

politics

எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்கிற தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலுவையில் இருப்பதை அதற்கான காரணமாகக் கூறியது ஆளுநர் தரப்பு.

ஆளுநர் இதுவரை முடிவு எடுக்காததற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிருப்தி தெரிவித்தது. இதனையடுத்து, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டைப் போல ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல் அரசாணை இயற்றி ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கைகள் வலுத்துள்ளது.டெல்லி சென்று பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டோரை சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எழுவர் விடுதலை தொடர்பாக கருத்து கேட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விழுப்புரத்தில் இன்று (நவம்பர் 6) செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், “7 பேர் விடுதலை விவகாரத்தில் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பேரறிவாளன் நீதிமன்றத்தில் கொடுத்த மனு குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று சொன்ன பின்பு, பல்நோக்கு விசாரணை ஆணையம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதை அறிய அறிக்கைக்காக காத்திருப்பதாக கூறியுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “ஆனால், 7 பேர் விடுதலைக்கும், பல்நோக்கு விசாரணை ஆணையத்திற்கும் சம்பந்தமில்லை, ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆளுநருக்கு இருந்த தடை அல்லது சந்தேகம் உச்ச நீதிமன்றத்தால் தெளிவாக விளக்கப்பட்டுவிட்டது. ஆளுநர் இதில் நல்ல முடிவை எடுப்பார் என தமிழக அரசு எதிர்பார்க்கிறது. ஆகவே, நல்ல முடிவு வரும்” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *