/அம்மனான அமைச்சர்!

politics

இன்று நாடு முழுவதும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு, அம்மன் அவதாரத்தில் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்காவின் வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.எஸ். காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் மகள் சந்திர பிரியங்கா காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து இவர் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இவர் தனது உறவினர் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், மகளிர் தினமான இன்று அம்மன் வேடமிட்ட அமைச்சர் சந்திர பிரியங்காவின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், அமைச்சர் சந்திர பிரியங்காவை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் பெண்கள் வரவேற்கின்றனர். அங்கு வைக்கப்பட்டுள்ள அம்மன் கீரிடத்துக்கு பூஜை செய்யப்படுகிறது. தொடர்ந்து அமைச்சருக்கு அம்மன் போன்று மேக் அப் செய்து, தலையில் கீரிடம் வைத்து, அலங்கரிக்கின்றனர். பின்பு அம்மன்போல் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஆன்மீகம் முதல் அறிவியல்வரை தடம் பதிக்கும் இடமெல்லாம் தரணி போற்ற வாழ்பவள் பெண். பெண் என்பவள் பிரம்ம சக்தியானவள். உண்மையின் உறைவிடமாய், உன்னத பிறப்பாய், உற்றாரைக் காக்கும் அம்மன் அவள். தாயாக, சகோதரியாக, தோழியாக, தாரமாக, மகளாக தங்களை சார்ந்தோரை தங்கும் எல்லை தெய்வமாக பெண் திகழ்கிறாள் என்று வீடியோவின் பின்னணியில் பாடல் ஒலிக்க, இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *