கேட்டது அழகிரி-கொடுக்கிறது தலைவர்: கே.என்.நேரு

politics

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்வழித்தடங்களில் ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியை இன்று(பிப்ரவரி 28) பக்கிங்காம் கால்வாயில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “முதல்வரின் உத்தரவின்படி, சென்னை நீர்வழித்தடங்களில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. கொசுக்கள் இல்லா சென்னையை உருவாக்க சென்னையின் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் நடத்தப்படவுள்ளது.
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் நீண்ட காலமாக அதிக இடங்கள் காலியாக உள்ளன. நிதிநிலை சுமை காரணமாக உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இதுகுறித்தான கோப்புகள் ஆய்வில் உள்ளன. இதுகுறித்து முதல்வருடன் கலந்து ஆலோசனை செய்து,விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

கடந்த 7 மாதங்களில் சென்னை மாநகராட்சிக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, தேர்வாகியுள்ள மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளின்படி, அரசு தேவையான நிதியை ஒதுக்கும். சென்னையில் ஏற்பட்ட பெருமழைக்கு பிறகு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாலை போடும் பணி மீண்டும் தொடங்கும். சென்னை மாநகராட்சியோடு புதிதாக இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளுக்கும் சென்னையின் மைய பகுதியில் இருப்பது போன்ற குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும். அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

21 மாநகராட்சிகளில் சில மேயர் பதவிகளை கேட்டிருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “கேட்டது அழகிரி, கொடுக்கிறது தலைவர். நான் உங்களைபோன்று ஒருஆள்தான். கட்சி தலைவர்தான் இதுகுறித்து முடிவெடுப்பார்” என்று கூறினார்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *