பட்ஜெட் 2022: 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்!

politics

2022-2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) காலை 8.45 மணிக்கு நிதியமைச்சகத்துக்கு வருகைத் தந்தார்.

மேலும் சம்பிரதாயப்படி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வருகைத் தந்தார்.

தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் 2022க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து 11 மணியளவில், டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றத் தொடங்கினார்.

அப்போது அவர், இந்த நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் நாம் வளர்ச்சியை நோக்கிப் பயணித்து கொண்டிருக்கிறோம். டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பருவநிலை மாற்றத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை அடிப்படையாகக் கொண்டு நமது பொருளாதார வளர்ச்சி இருக்கும். ஏழை எளிய மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான குடிநீர், எரிவாயு உள்ளிட்டவற்றைக் கொடுப்பதற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

நடுத்தர மக்கள் அனைத்து வசதிகளையும் பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை, இந்தியாவைச் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளிலிருந்து 100ஆவது ஆண்டை நோக்கி அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த பட்ஜெட்டில் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

1000 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் கரீப், ரபி பருவ விளைபொருட்கள் வரும் நிதியாண்டில் கொள்முதல் செய்யப்படும், இது ஒருகோடி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும். ட்ரோன் தொழில்நுட்பம், பயிர் வகைகளை மதிப்பீடு செய்யவும், நில ஆவணங்களை சரிபார்க்கவும், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை இறுதி செய்யவும் பயன்படுத்தப்படும்.

இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தின்கீழ் 6 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *