kp munusami will not attend admk general meeting

அதிமுக பொதுக்குழு : கே.பி.முனுசாமி வராதது ஏன்?

அரசியல்

அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கலந்து கொள்ளாதது கேள்வியை எழுப்பியுள்ளது.

இன்று (டிசம்பர் 26) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி கலந்துகொள்ளவில்லை. வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி அருகே அமரக் கூடியவர் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி.

எனவே, பொதுக்குழு கூட்டத்துக்கு அவர் வராதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. உடல்நிலை சரியில்லையா அல்லது வேறு ஏதும் காரணமா என விவாதம் எழுந்த நிலையில், பிறகுதான் அவர் வராதது குறித்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு தெரியவந்திருக்கிறது.

“கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினத்தைச் சேர்ந்தவர் கே.பி.முனுசாமி. இவரது தந்தை பூங்காவனம்(103). வயது மூப்பு காரணமாக கடந்த டிசம்பர் 18ஆம் தேதி காலமானார்.

இவரது மறைவை தொடர்ந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் காவேரிபட்டினத்துக்கு சென்று கே.பி.முனுசாமியை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

தந்தை மறைவெய்தி இன்னும் முழுமையாக 10நாள் கூட ஆகாத காரணத்தால் தான் அவர் பொதுக்குழுவுக்கு வரவில்லை” என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

விசாரணைக்கு ஆஜராகாத ED அதிகாரிகள்: போலீஸ் எடுத்த முக்கிய முடிவு!

தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *