கட்சிப் பணி: கேள்வி கேட்ட அண்ணாமலை… கிளம்பிய நிர்மல்

அரசியல்

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த ஐடி பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல்குமாருக்கு அக்கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் அக்னி எம்.ராஜேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (மார்ச் 5) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக ஐடி பிரிவினருடைய தலைவராக செயல்பட்ட சி.டி .நிர்மல் குமார் செயல்பாடுகள் முற்றிலும் சரியில்லை என்பதை புள்ளி விபரத்துடன், கட்சி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்திய ஆய்வு கூட்டத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 15ம் தேதி மிகக் கடுமையாக நேரடியாக நிர்வாகிகளின் முன்பு வைத்து எச்சரிக்கை விடுத்தார்.

ஒரு மாத காலத்திற்குள் ஐ.டி பிரிவினுடைய செயல்பாடுகள் சரி செய்யப்பட வேண்டும். என்றும் அதற்கு மாறாக செயல்பாடுகள் சரியில்லை என்றால் ஐடி மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில தலைவராக இருக்கக்கூடிய C.T. நிர்மல் குமாரை மாற்றி விடுவேன் என்று கட்சியின் ஐடி பிரிவு நிர்வாகிகள் அனைவருக்கும் முன்பு மாநில தலைவர் கட்சியின் வளர்ச்சி நலன் கருதி நேரில் எச்சரித்து கூறியது உண்மையில் நடந்த நிகழ்வு ஆகும்.

நிதர்சன நிலை இப்படி இருக்கும் பொழுது தனது ஐடி பிரிவு செயல்பாடுகளை சிறப்பாக செய்திட முடியாத, இயலாமையின் காரணமாக பதவியை விட்டு விலகும் நிலைக்குச் சென்ற செயலற்ற IT தலைவரான சி.டி. நிர்மல் குமார் ,உண்மை நிலையை மறைத்து அதற்கு மாறாக தமிழக பாஜக மாநில தலைவரை குறை கூறி செல்வது என்பது ஒரு நல்ல பண்பு அல்ல.

தன்னால் தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய வளர்ச்சிக்கு, மாநில தலைவருடைய கடுமையான களப்பணி செயல்பாட்டுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் ஐடி பிரிவினுடைய தலைமை பொறுப்பில் செயல்படாமல் , செயல்பட இயலாததால் கட்சியை விட்டு ஓடியது, நன்கு செயல்படக் கூடிய ஒரு புதியவருக்கு வழிவிட்டது உள்ளபடியே பாரதிய ஜனதா கட்சிக்கு வலு சேர்க்க கூடிய நல்ல நிகழ்வு ஆகும்.

கட்சியை விட்டு செல்லும் போது இதுநாள் வரை தான் பயணித்த கட்சியையும், தலைமை மீதும் சேற்றை வாரி இறைத்து சென்றிருப்பதற்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

bjp sports president slams ctr nirmal kumar
பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலதுணைத் தலைவர் அக்னி M.ராஜேஷ் (வலதுபக்கம்)

கடந்த ஒன்றரை வருடங்களாக கடுமையாக பணியாற்றியதாக கூறி இருக்கும் திரு. நிர்மல் குமாரின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை மாநிலத் தலைவர் புள்ளிவிபரத்துடன் அத்துனை பேருக்கு முன்பாக கடந்த மாதம் கூறியது அவருக்கு பெருத்த அவமானத்தை தந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மாநிலத் தலைவராக அண்ணாமலை பதவி ஏற்ற பின்பு தமிழகத்தின் பட்டி, தொட்டி எங்கும் பாமர மக்களும் பாரதிய ஜனதா கட்சியின் உண்மையான தேசப்பற்று, மத்திய அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் உண்மை நிலை குறித்து அறிந்து, மிகுந்த பிடிப்புடன் பாஜகவில் இணைந்து வருகிறார்கள் என்பதை ஐ டி பிரிவில் தலைமைப் பொறுப்பில் தூங்கிக் கொண்டிருந்த நிர்மல் குமாருக்கு தெரிய வாய்ப்பில்லை.

பாரதிய ஜனதாவில் நேர்மை தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியை வைத்து எவரும் வியாபாரம் செய்ய முடியாது என்ற உண்மை நிலையை உணர்ந்தவுடன், இப்படி கட்சியின் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, நேர்மையாக செயல்பட்டு வரும் தலைமை மீது குற்றம் சுமத்தி செல்வது என்பதும் புதிதல்ல.

ஏற்கனவே இவரைப்போல வியாபார எண்ணத்தோடு இருந்தவர்கள் அண்ணாமலை மீது ஆதங்கத்துடன் இப்படி குற்றச்சாட்டை சொல்லி விட்டுத்தான் போய் இருக்கிறார்கள்.

அண்ணாமலை தொண்டர்களை மதிக்கக்கூடிய தலைவர் என்பதால்தான் இன்றைக்கு தமிழகத்தில் அவர் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் கூட்டமும், பெண்கள் கூட்டமும் கடல் அலை போல் கூடி வருகிறது. அது ஒன்றே அவர் தொண்டர்களை மதிக்கக்கூடிய தலைவர் என்பதற்கு மிகப்பெரிய சாட்சி ஆகும்.

மேலும் கட்சியின் கட்டமைப்பை இன்னும் பலப்படுத்த வேண்டும் என்ற அண்ணாமலையின் உத்தரவை ஏற்று தமிழகத்தில் அனைத்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பாடுபட்டு வருகிறார்கள்.

திரை மறைவில் பேரம் பேசுவதும், ஊழல் செய்வதும், அந்த ஊழல் பணத்தில் ஒய்யாரமாக உலா வருவதும் யார் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். எனவே திரை மறைவில் பேரம் பேசுவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் மீது அவர் பெயரை ஏற்படுத்த 1000 நிர்மல்குமார்கள் வந்தாலும் அது தமிழக மக்களிடமும், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களிடம் எடுபடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியை குறை கூறிவிட்டு உடனடியாக அதிமுகவில் சேர்ந்திருக்கக்கூடிய C.T. நிர்மல் குமார் வெகு விரைவில் அதிமுக தலைமையை குறை கூறிவிட்டு செல்லும் ஈனச் செயலை செய்யாமல் இருக்க வேண்டும் என்று கூறி எனது கண்டனத்தை பதிவு செய்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

WPL: மிரட்டிய ஷபாலி, பந்தாடிய டாரா.. சரணடைந்த பெங்களூரு

டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜியோடு அண்ணாமலை டீல்?  பாஜக நிர்வாகியை ‘தூக்கிய’ எடப்பாடி

+1
0
+1
2
+1
1
+1
4
+1
2
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *