மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(டிசம்பர் 26) ஆலோசனைக் கூட்டம் நடத்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18 ஆம் தேதிகளில் பெய்த அதிகனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பினை சந்தித்துள்ளன.
தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வெள்ள நிவாரண பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை பார்வையிட மத்திய அரசு சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி. எஸ்.பி.. பாலாஜி சரவணன் உள்ளிட்ட அதிகாரிகளும், பா.ஜ. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாஇருஷ்ணன். எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், சசிகலா புஷ்பா ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து மழை வெள்ள பாதிப்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான புகைப்படங்களைக் காட்டி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துரைத்தனர்.
மேலும் வெள்ள பாதிப்பின் தற்போதைய நிலைமை மற்றும் தமிழ்நாடு அரசு மூலம் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் குறித்தும், மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு மத்திய அரசு நிதியின் முக்கியமான தேவை குறித்தும் 72 பக்க அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நிர்மலா சீதாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உலகக்கோப்பையில் பார்வை குறைபாட்டுடன் விளையாடிய கேப்டன் : ரசிகர்கள் அதிர்ச்சி!
திடீரென பற்றியெரிந்த கார்… கீர்த்தி பாண்டியன் ட்வீட்டால்… அடுத்து நடந்த ட்விஸ்ட்!