மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஏப் 2020

பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடிய அன்புமணி!

பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடிய அன்புமணி!

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பிக்கு நேற்று (அக்டோபர் 9) பிறந்த நாள். தனது பிறந்த நாள் விழாவை ஆடம்பரம், விளம்பரமில்லாமல் குடும்பத்தோடு எளிமையாகக் கொண்டாடினார்.

அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளைக் கட்சியினர் கொண்டாடக் கூடாது என்று மறைமுகமான அன்புக் கட்டளையால், கட்சியினர் யாரும் இதை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. அன்புமணிக்கு நெருக்கமானவர்கள் மட்டும் வாட்ஸ்அப்பில் வாழ்த்துகள் கூறியிருந்தார்கள்.

வழக்கமாகப் பிறந்த நாள் என்றால் அன்புமணி, தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று தாய் தந்தையிடம் ஆசி பெறுவார். இந்தவருடம், தந்தை ராமதாஸ், தாய் சரஸ்வதி இருவரும் சென்னைக்குச் சென்று அன்புமணிக்கு வாழ்த்துகள் கூறி குடும்பத்தோடும், உறவினர்களோடும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியோடு பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்கள்.

அன்புமணி ராமதாஸ் தனது பிறந்த நாளைக் கட்சியினர் கொண்டாட வேண்டாம் என்றதால், கட்சியினர் பலருக்கும் நேற்று அவருடைய பிறந்த நாள் என்பதே தெரியவில்லை என்கிறார்கள்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon