vடிக் டாக்: சும்மா இருக்குறது இவ்வளவு கஷ்டமா?

entertainment

21 நாட்கள் எங்கேயும் போகாமல் வீட்டுக்குள்ளேயே நாம் முடங்கி இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

முடங்கி இருக்கிறோம் என்று கூறுவதை விடவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஆனால், இத்தனை நாட்களை எப்படி கழிப்பது என்னும் கவலை பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. வெறும் இரண்டு மூன்று நாட்களிலேயே பலரும் சோர்வடைந்து விட்டார்கள். சாதாரணமாக வேலை செய்த களைப்பில் சோர்வாகி விடுவார்கள் என்றால் இங்கு பலரும் சும்மா இருந்தே சோர்வடைந்து விட்டார்கள்.

நேரத்தை வீணாக்க என்னவெல்லாம் செய்வது என்பதாக சில மீம்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. ‘இன்று பிஸ்கெட்டில் இருக்கும் துளைகளை எண்ணி முடித்தேன்’, ‘என் தலை முடிகளின் ஒரு பகுதியை எண்ணி முடித்தேன்’ என்பதாக மீம்கள் பார்த்ததும் நம்மை சிரிக்க வைக்கின்றன. அது போன்ற பல வீடியோக்களை டிக் டாக்கில் பார்க்க முடிகிறது.

@moon121234

♬ original sound – Abraz I Khan

அவ்வாறான வீடியோ ஒன்றில் ஒரு பெண், தனித்தனியாக இருக்கும் அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக ஒரே பாத்திரத்தில் கலந்து விடுகிறார். பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக எண்ணி மீண்டும் தனித்தனியாகப் பிரிக்கிறார். தொடர்ந்து அவற்றின் எண்ணிக்கையைக் குறித்துக் கொள்கிறார். அனைவரையும் சிரிக்க வைத்த இந்த வீடியோ 20 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. சிரிப்பதற்கு இத்தகைய மீம்களும், வீடியோக்களும் உதவி செய்தாலும் சிந்திக்கும் போது சற்று வருத்தமளிப்பதாகவே உள்ளது.

ஒரு ஆபத்தில் இருந்து மறைந்து வாழ்வதாகவே இருந்தாலும் இது போன்றதொரு வாய்ப்பு நமக்கு மீண்டும் கிடைக்காது. 21 நாட்கள், 504 மணி நேரம். நாம் கற்றுக் கொள்ள வேண்டியதும், புரிந்துகொள்ள வேண்டியதும் ஏராளம் இருக்கின்றன. முதலில் மொபைல் ஃபோன்களை சற்று ஓரம் வைத்து விட்டு வீட்டில் இருக்கும் அனைவருடனும் சற்று உரையாடுங்கள். மிகப்பெரிய புரிதல்களை அது ஏற்படுத்தலாம். கற்பதற்கும், கற்றுக்கொடுப்பதற்கும் நிறைய இருக்கின்றன. ‘காலம் பொன் போன்றது’ அல்ல, ‘காலம் பொன்னை விடவும் போற்றத்தக்கது’. திட்டமிட்டு பயன்படுத்தலாமே.

சிரிப்பதற்கும் சிரிக்க வைப்பதற்கும் நேரத்தை ஒதுக்கி விட்டு, எதிர்காலத்திற்கான தேடுதலில் நாம் மூழ்கலாம்.

**டிக் டாக் யூஸர்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *