ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு-தலைவி- 2. தயாரிக்க திட்டம்

entertainment

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படமாக தயாராகி உள்ளது தலைவி எனபெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தணிக்கை முடிந்து வெளியிட தயாராக உள்ளது .

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தலைவி படத்தை வெளியிட திட்டமிட்டு தொடங்கப்பட்ட தலைவி கொரோனா தொற்று தாக்கம், அதன் காரணமாக அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு காரணமாக படத்தின் பணிகளும் முடங்கிபோனது.

ஜெயலலிதாவின் சினிமா, அரசியல் வாழ்க்கை, அந்தரங்க வாழ்க்கை பற்றி அறிந்தவர்கள் திரைப்படத்தில் இவற்றையெல்லாம் காட்சிகளாக்கி கதை சொல்லமுடியுமா என்ற கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பினார்கள். அதேநேரம் ஜெயலலிதா வாழ்க்கை கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் வலைதொடராக வெளியாகிவிட்டது.

இவற்றை கடந்து தலைவி படத்தில் சுவாரஸ்யம் அரசியல் பரபரப்புகள் இருக்கிறதோ இல்லையோ திரையரங்கின் பிரம்மாண்டமான திரையில் தலைவி” படத்தை காண அனைத்து தரப்பினருமே ஆவலாக இருக்கின்றனர்.

இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் சர்ச்சை புகழ் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர். ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனி, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் மதுபாலா, சசிகலாவாக பூர்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். விஜய் இயக்கி உள்ளார்.தியேட்டர்களை திறந்ததும் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் தலைவி 2-ம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை, எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு பல்வேறு தடைகளை கடந்து முதல்-அமைச்சர் ஆவது வரை உள்ள காட்சிகள் இடம்பெற்று உள்ளது.

இரண்டாம் பாகத்தில் முதல்-அமைச்சரான பிறகு ஜெயலலிதாவின் ஆட்சி திறன் நிகழ்த்திய சாதனைகள். அரசியல் போராட்டங்கள், சொத்து குவிப்பு வழக்குகள், கைது, மீண்டும் தேர்தலில் நின்று ஆட்சியை கைப்பற்றியது பற்றி திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா இருவரும் வாழ்நாள் முழுவதும் திமுக எதிர்ப்பு அரசியல் செய்தவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை எங்கிருந்து தொடங்கினாலும் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியை தவிர்க்க முடியாது.

இதனை எப்படி இயக்குநர் கையாண்டிருப்பார் என்று அரசியல் வட்டாரத்தில், மட்டுமல்ல சினிமா வட்டாரத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையில் தலைவி படம் திரையரங்குகளில் சுமுகமாக வெளியாக அனுமதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

**-இராமானுஜம்**

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *