சமீபத்தில் பெய்த கன மழை ஆந்திர மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 30 பேருக்கு மேல் வெள்ளம் காரணமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநில அரசு மக்களிடம் வெள்ள நிவாரண நிதி திரட்டி வருகிறது. தெலுங்கு மொழி நடிகர்கள் வெள்ள நிவாரண நிதியை அறிவித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரணும் தலா 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
அதேபோல ஜூனியர் என்டிஆர், மற்றும் மகேஷ்பாபு ஆகியோர் தலா 25 லட்சம் அறிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து பல நடிகர்கள் தங்கள் வசதிக்கேற்ப வெள்ள நிவாரண நிதிக்குத் தொகையை அறிவித்து வருகிறார்கள். நிவாரண உதவிகள் வழங்கிய நடிகர்கள் ஆந்திர மக்களின் நிலை கண்டு மனம் நெகிழ்வதாகவும் இந்த நேரத்தில் அரசுக்கு அனைவரும் துணையாக நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
**-இராமானுஜம்**
�,