திரையரங்கில் மது விற்பனை: பிரபல இயக்குநர் யோசனை!

entertainment

பீர் உள்ளிட்ட மதுபானங்களை திரையரங்கில் விற்பனை செய்வதன் மூலம் வருமானத்தை அதிகரிக்கலாம் என்று பிரபல இயக்குநர் நாக் அஷ்வின் யோசனை கூறியுள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் படுவதற்கு முன்பாகவே இந்தியாவில் பல மாநிலங்களிலும் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் மக்கள் நலன் கருதி திரையரங்குகளும் மூடப்பட்டன.

சுமார் இரண்டு மாத காலமாக திரையரங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் திரைப்பட வெளியீடுகளும் முடங்கிப் போயுள்ளன. திரையரங்குகளுக்கு வராமல் திரைப்படங்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியிடப்படுவதும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தின் இயக்குநர் நாக் அஷ்வின் திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக வருவதற்கு அனுமதி பெற்று மதுபானங்களை அங்கேயே விற்கலாம் என்று யோசனை கூறியுள்ளார்.

இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், “ஒரு முறை சுரேஷ்பாபு மற்றும் ராணாவுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது இந்தப் பேச்சு வந்தது. பிற நாடுகளைப் போன்றே இங்கும் அனுமதி பெற்று மது பானங்களை திரையரங்குகளில் விற்பனை செய்யலாம். இது திரையரங்க வருமானத்தை அதிகப்படுத்தும் என நினைக்கிறேன். இந்த யோசனை எப்படி இருக்கிறது? நல்ல ஐடியாவா? கெட்ட ஐடியாவா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுக்கடைகள் திறப்பதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நாக் அஷ்வினின் இந்தப் பதிவு சிலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *