மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் சைக்கோ.
டபுள்மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகப் படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பணிகளில் முழு வீச்சில் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வந்தாலும், திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்த அவர் தவறவில்லை. சைக்கோ திரைப்படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதிதி ராவ் மற்றும் நித்யா மேனன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் ‘உன்ன நெனச்சு’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்து, ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் நிலையில் டிசம்பர் 27ஆம் தேதி படம் வெளிவராது எனத் தெரிவிக்கப்பட்டுப் படக்குழுவின் சார்பில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 24ஆம் தேதி சைக்கோ திரைப்படம் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Psycho pic.twitter.com/TBPLeSmR3w
— Udhay (@Udhaystalin) December 20, 2019
உதயநிதி ஸ்டாலின் தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் திரைப்படத்திலும், மகிழ் திருமேனி இயக்கும் மற்றொரு திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
�,”