சமந்தாவுக்கு நடிக்க கற்றுக் கொடுக்கும் ஹாலிவுட் நடிகை!

entertainment

லாக் டவுன் காரணமாகக் கிடைத்த ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றும் வகையில் நடிகை சமந்தா, ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பு கற்று வருகிறார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, பிரபல நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர், தனது திறமைகளை மேம்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களைத் தேர்வு செய்து சமந்தா நடித்து வருகிறார். அவர் முதன்மை வேடத்தில் நடித்து, சமீபத்தில் வெளியான ’96’ திரை படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ‘ஜானு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு இன்றி வீட்டிலேயே இருக்கும் சமந்தா, தனது ஓய்வு நேரத்தை சிறப்பாக மாற்ற முடிவு செய்தார். அதன் படி பிரபல ஹாலிவுட் நடிகை ஹெலன் மிரனிடம் ஆன்லைன் வகுப்பில் நடிக்க கற்று வருகிறார்.

இது தொடர்பான புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், **”நான் இன்னும் சிறப்பாக நடிக்கும் நடிகையாகப் போகிறேன். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். அவ்வாறு இல்லை என்றால், இந்த போஸ்ட்டை நான் நீக்கி விடுவேன்”** என்று சமந்தா நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *