ஐபிஎல் ஆட்டங்களுக்காக அட்டவணையை மாற்ற முடியாது – இங்கிலாந்து

entertainment

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்களை நடத்த இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யுமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளவில்லை.

14ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் 29 ஆட்டங்கள் நடந்த நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது. ஐபிஎல் போட்டியில் இன்னும் 31 ஆட்டங்களை நடத்த வேண்டும். இந்தப் போட்டிகளை உலகக் கோப்பைக்கு முன்பு செப்டம்பர் – அக்டோபரில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கிடையே ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்களை நடத்துவதற்கேற்ற வகையில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யுமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்திய கிரிக்கெட் அணி ஆறு டெஸ்டில் விளையாடுவதற்காக வருகிற ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து செல்கிறது. முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடுகிறது.

அதைத்தொடர்ந்து இங்கிலாந்துடன் ஐந்து டெஸ்டில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4இல் தொடங்கும் டெஸ்டை முன்னதாக ஆரம்பிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது. செப்டம்பர் 14ஆம் தேதி முடிவடையும் டெஸ்ட் தொடரை செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் முடிக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தது.

ஆனால், இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போட்டியை ஒளிபரப்பும் நிறுவனத்தால் அட்டவணையை மாற்றி அமைக்க விரும்பவில்லை. இதனால் இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் இருக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *