Oஅஜித் படத்தில் இணையும் கவின்?

entertainment

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தில் நடிகர் கவின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் மூன்றாவது முறையாக தனது 61வது படத்தில் இணைகிறார். ஏற்கனவே இந்த கூட்டணியில் தற்போது ‘வலிமை’ படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகும் நிலையில் 80 கோடிக்கும் அதிகமான வசூலை நெருங்கியுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்கு பிறகு தனது 61வது படத்திலும் நடிகர் அஜித் ஹெச். வினோத்துடன் இணைந்துள்ளார்.

‘மங்காத்தா’, ‘பில்லா’ படங்களை போன்று அஜித்தின் இந்த 61வது படத்தின் கதையிலும் நெகட்டிவ் கலந்த கதாப்பாத்திரமாக இருக்கும் என தனது முந்தைய பேட்டிகளில் வினோத் தெரிவித்திருந்தார்.

அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நீண்ட வருடங்கள் கழித்து நடிகை தபு அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளார். இவர்கள் தவிர நடிகர் பிரகாஷ்ராஜூம் படக்குழுவில் இணைந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் கவினும் அஜித்துடன் இந்த படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் எதிர்ப்பார்க்கலாம். நடிகர் கவின் கைவசம் தற்போது’ஊர்க்குருவி’ திரைப்படம் உள்ளது. இது தவிர, ‘பீஸ்ட்’ படத்தில் இயக்குநர் நெல்சனுடன் இணைந்து இயக்குநர் குழுவில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *