Vதிருமணத்திற்கு தயாராகும் வினய்

entertainment

’உன்னாலே உன்னாலே’, ‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் வினய் தற்போது திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.

2007ஆம் ஆண்டு ‘உன்னாலே உன்னாலே’ படம் மூலமாக கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் வினய். இதன் பிறகு, ‘ஜெயம் கொண்டான்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘அரண்மனை’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். பின்பு 2017ல் இயக்குநர் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ படத்தில் வில்லனாக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக ‘டாக்டர்’, ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார்.

தற்போது வினய்க்கு 42 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ஆனால், இவரும் நடிகை விமலா ராமனும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருகின்றனர். இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘பொய்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விமலா ராமன். பிறகு ‘ராமன் தேடிய சீதை’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். இவரும் நடிகர் வினய்யும் கடந்த சில வருடங்களாவே காதலித்து வருகின்றனர். குடும்பமாக, நண்பர்களாக, இவர்கள் இருவரும் தனியாக வெளியே சென்று வரும் புகைப்படங்களையும் இவர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விரைவில் தங்களது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுக்கு வில்லனாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் கடைசியாக நடித்தார் வினய். அடுத்து இவரது நடிப்பில் 2டி புரொடக்‌ஷன் தயாரிப்பில் ‘ஓ மை டாக்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *