uலால்சிங் சத்தா வெளியீட்டு தேதி மாற்றம் ஏன்?

entertainment

பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்ஸ் நடிப்பில், 1994-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் ‘தி ஃபாரஸ்ட் கம்ப். இந்தத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் லால் சிங் சத்தா.

இந்தப் படத்தில் கதாநாயகனாக அமீர்கானும், அவருக்கு ஜோடியாக கரீனா கபூரும் நடித்துள்ளனர். அமீர்கானின் நண்பராக, ராணுவ வீரராக தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார்.
படம் தொடங்கப்பட்டபோது, 2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பொது முடக்கம் காரணமாக இருமுறை திட்டமிடப்பட்டும் ரீலீஸ் செய்ய முடியவில்லைஇந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதிவெளியாகும் என அறிவிக்கப்பட்டது
இந்நிலையில், தற்போது, வரும் ஏப்ரல் 14-ம் தேதி படம் வெளியாகாது என்றும், ஆகஸ்ட் 11-ம் தேதி ‘லால் சிங் சத்தா’ படம் வெளியாகும் என்றும் அமீர்கான் அதிகாரப்பூர்வமாக தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 14-ம் தேதிக்குள் ‘லால் சிங் சத்தா’ படத்தின் வேலைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியாத சூழல் உள்ளதால், படத்தை திட்டமிட்டப்படி வெளியிட முடியவில்லை என அமீர்கான் விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும், தனது அறிவிப்பில் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகவிருந்த நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் ‘லால் சிங் சத்தா’ படத்திற்காக வழிவிட்டு, வேறு ஒரு தேதியில் வெளியாக உள்ளதையும் அமீர்கான் குறிப்பிட்டுள்ளார்.

ஆதிபுருஷ்படக்குழு மற்றும் நாயகன் பிரபாஸுக்கும் தனது நன்றியை அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இதனால் ஆதிபுருஷ் படத்தின் வேறொரு ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.

எனினும், ஷாகித் கபூரின் ‘ஜெர்ஸி‘ குறிப்பிட்டப்படி ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது. 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் வெளியிட திட்டமிடப்பட்ட படத்தின் வேலைகள் இதுவரை நிறைவடையவில்லை என அமீர்கான் கூறியிருப்பது, ஏதாவது ஒரு காரணம் கூறவேண்டும் என்பதற்காக மட்டுமே என்கிறது வணிக வட்டாரம். பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின் தெலுங்குபடங்கள் வட இந்தியாவில் இந்திப்படங்களுக்கு இணையாக ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்து வருகிறது.

அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021 டிசம்பர் 17 அன்று வெளியான புஷ்பாதிரைப்படத்தின் இந்தி பதிப்பு 50 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதனால் தென்னிந்திய மொழி படங்கள் வெளியாகும் போது இந்திப்படங்களை வெளியிட்டால் வசூல் ரீதியாக இந்தியா முழுவதும்பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனென்றால் ஆந்திரா, கர்னாடகா மாநிலங்களில் இந்திப்படங்கள் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்படுவது உண்டு அதன்மூலம் மிகப்பெரும் வசூல் கிடைக்கும் தெலுங்கு, கன்னடப்படங்கள் வெளியாகும்போது இந்திப்படங்களுக்கு திரையரங்குகள் குறைவாகவே கிடைக்கும்.

தற்போது வட இந்தியாவிலும் தென்னிந்திய மொழி படங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன.இதன் காரணமாகவே அமீர்கான் வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளார் என்கின்றனர் மேலும்ஏப்ரல் 14-ம் தேதி கன்னட நடிகர் யாஷின் படமான கே.ஜி.எஃப். வெளியாகிறது.

அதேபோல் நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படம் ஏப்ரல் 14 அல்லது 28-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன் காரணமாகவே லால்சிங் சத்தா வெளியீட்டு தேதி மாறுதலுக்கான காரணமாக இருக்ககூடும் என்கின்றனர் சினிமா வியாபாரிகள்.

**- இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *