மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

இத்தனைப் படங்கள் ஓடிடி-க்குச் செல்கிறதா? முழு லிஸ்ட்!

இத்தனைப் படங்கள் ஓடிடி-க்குச் செல்கிறதா? முழு லிஸ்ட்!

தமிழ் சினிமா மெல்ல மெல்ல நேரடியாக ஓடிடி ரிலீஸுக்கு பழகிக் கொண்டிருக்கும் சூழல் இது. கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்கில் படத்தை வெளியிட்டு வசூல் பார்ப்பதெல்லாம் இன்றைய காலக்கட்டத்தில் சவாலான விஷயமாக இருக்கிறது.

ஏற்கெனவே, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் `சூரரைப்போற்று' பிரைம் வீடியோவில் வெளியானது. தொடர்ந்து, தனுஷ் நடிக்க ‘ஜெகமே தந்திரம்’ படமும் ஓடிடி-யில் வெளியாக இருக்கிறது. இன்னும் ஏராளமான சின்ன படங்களும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தற்பொழுது, கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்கில் வெளியாக திட்டமிடப்பட்ட பல படங்கள் ஓடிடி-க்கு லைன் கட்டி காத்திருகிறது.

அடுத்தக் கட்டமாக ஓடிடியில் வெளியாக முதல் வரிசையில் இருக்கும் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் படம் `டாக்டர்'. முதலில் இந்தப் படம் மார்ச் மாசம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலால் தள்ளிப் போனது. இப்போது, கொரோனாவினால் மீண்டும் தள்ளிப் போய் நேரடியாக ஓடிடி ரிலீஸூக்கு வந்துவிட்டது. டாக்டர் படம் பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது.

அடுத்ததாக, டில்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி - பார்த்திபன் நடித்திருக்கும் படம் `துக்ளக் தர்பார்'. இந்தப் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. கூடவே, விஜய் சேதுபதி நடித்து சில வருடமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் படம் `மாமனிதன்'. இதுவும் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறதாம்.

நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஏற்கெனவே மூக்குத்தி அம்மன் படம் ஹாட் ஸ்டாரில் வெளியானது. தற்பொழுது, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மற்றுமொரு படமும் ஓடிடிக்கு வருகிறது. `ப்ளைன்ட்' படத்தின் தமிழ் ரீமேக்கான `நெற்றிக்கண்' படம் தான் அது. `அவள்' படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் தான் `பரமபதம் விளையாட்டு' ஹாட்ஸ்டாரில் வெளியானது. அதே ஹாட்ஸ்டாரில் த்ரிஷாவின் `ராங்கி' படத்தையும் வெளியிட இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஒவ்வொன்றாக படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்.

- தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 25 ஏப் 2021