xமின் கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியது ஏன்?

public

ஊரடங்கு காலத்தில்  மின் கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மின் பகிர்மானக் கழகம் விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணம் செலுத்த முதலில் கால  அவகாசம் வழங்கப்பட்டது. இதனிடையே மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ஊரடங்கு காரணமாக மின் கணக்கீடு செய்யாததால் வீட்டு பயன்பாட்டு மின் நுகர்வோர் , முந்தைய கட்டணத்தை செலுத்தலாம். மின் கணக்கீடு செய்த பின் ஏற்கனவே செலுத்திய தொகையை கழித்துவிட்டு மீதியை செலுத்தலாம் என்று தெரிவித்தது

இது தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல் ரவி  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான மின் கட்டணத்தை மின்சார ஊழியர்கள் மொத்தமாக கணக்கிட்டுள்ளனர். இதனால் வழக்கமாக வரும் கட்டணத்தை விட கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிலையில் பொது மக்கள் உள்ளனர். எனவே இரண்டு மாதங்களாக பிரித்து மின்சார பயன்பாட்டை கணக்கிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, முந்தைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய கட்டணம் கணக்கிடப்படும். பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க முடியாது என்று மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.  

ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் 18 முதல் 20 மணி நேரம் வீட்டிலேயே இருப்பதால் மின் நுகர்வு அதிகமாகி மின் கட்டணம்  உயர்ந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கை வரும் ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *