xவேலைவாய்ப்பு: சென்னை காற்றாலை மையத்தில் பணி!

public

சென்னை, தேசிய காற்றாலை மையத்தில் காலியாக உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர், அக்கவுன்ட்ஸ் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களை ஒப்பந்தக்கால அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 3

பணியின் தன்மை: திட்ட ஒருங்கிணைப்பாளர்

கல்வித் தகுதி: நிதியியல் துறையில் எம்பிஏ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,000 – 40,000/-

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

பணியின் தன்மை: அக்கவுன்ட்ஸ் எக்ஸிக்யூடிவ்

சம்பளம்: மாதம் ரூ.35,000 – 40,000/-

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.niwe.res.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து,

துணை இயக்குநர் ஜெனரல், தேசிய காற்றாலை மையம், வேளச்சேரி – தாம்பரம் மெயின் ரோடு, பள்ளிக்கரணை, சென்னை – 600 100 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 07.05.2018

மேலும் விவரங்களுக்கு [தேசிய காற்றாலை மைய](http://niwe.res.in/assets/Docu/recruitment/Advt_for_project_coordinator&accounts_executive_16.04.2018.pdf ) இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *