wஇந்திய பெண்கள் ஹாக்கி அணியின் (தொடர்) தோல்வி!

public

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது. முதல் 4 ஆட்டங்களில் முறையே இந்திய அணி 1-4, 2-8, 2-3 மற்றும் 0-3 என்ற கோல் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5ஆவது போட்டி இன்று (மே 20) காலை நடைபெற்றது.

போட்டி தொடங்கிய 4ஆவது நிமிடத்தில் நியூசிலாந்து நாட்டின் வீராங்கனை ஒலிவியா மேரி முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். அதன் பின்னர் மீண்டும் 15ஆவது நிமிடத்தில் ஒலிவியா ஒரு கோல் அடித்தார். அதன் மூலம் கால்பாதி ஆட்டம் முடிவதற்கும் நியூசிலாந்து அணி 2-0 என முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. இரண்டாவது கால்பாதி ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திற்குள் இந்திய அணியின் வீராங்கனை தீப் கிரேஸ் முதல் கோல் அடுத்தார். ஆனால் நியூசிலாந்து வீராங்கனை பிப்பா ஹேவார்ட் 5ஆவது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து அணியின் கோல் கணக்கை அதிகரித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இரண்டாவது கால்பாதி முடிவில் நியூசிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

அதன் பின்னர் 3ஆவது கால்பாதி தொடங்கிய சற்று நேரத்திற்குள் இந்திய அணியின் கேப்டன் ராணி ஒரு கோல் அடித்து 2-3 என்ற கோல்கணக்கில் நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தார், இருப்பினும் அதன்பின்னர் நியூசிலாந்து அணி வீராங்கனைகள் தொடர்ந்து 3 கோல்கள் அடித்து இந்திய அணியின் வெற்றியை பறித்தனர். இறுதியில் இந்திய அணி 2-6 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது மட்டுமின்றி 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் ஒரூ போட்டியிலும் வெற்றிபெற முடியாமல் ஒயிட்வாஸ் ஆனது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *