Vமாஸ்கோ திரைப்பட விழாவில் `மாம்’!

public

நடிகை ஸ்ரீதேவி பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாம் திரைப்படம் மாஸ்கோ திரைப்பட விழாவில் கலந்துகொண்டது.

ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடித்த படம் ‘மாம்’. நவாஸுதீன் சித்திக், அக்‌ஷய் கண்ணா ஆகியோரும் நடித்திருந்தனர். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி வெளியான இந்தப் படம், தமிழில் ‘அம்மா’ என்ற பெயரில் வெளியானது. உலகம் முழுவதும் வெளியாகி 60 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

மாம் படம் மாஸ்கோவில் நடைபெற்றுவரும் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியும் அவரது கணவர் போனி கபூரும் கலந்துகொண்டனர். அதிகமாக இந்தியப் படங்கள் வெளியாகாத ரஷ்யாவில் தனக்கு இருக்கும் ரசிகர்களைக் கண்டு வியந்து போயிருக்கிறார் ஸ்ரீதேவி. மாம் படத்தை ரஷ்யாவில் திரையிடவும் திட்டமிட்டுவருகிறார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *