uதென் தமிழக ரயில் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி!

public

தமிழகத்தின் தலைநகரான சென்னையில், வேலைவாய்ப்புக்காக பணிபுரிபவர்கள் அதிகம். இதனால் ஒவ்வொரு வாரமும், வார இறுதிநாட்களில் தமிழ்நாட்டின், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் கூடுதலான கூட்டம் அலைமோதுகிறது. இதனால், ஏராளமான மக்கள் உட்கார இடம் இல்லாமல் ரயில் பெட்டிகளில் நின்றுகொண்டே பயணம் செய்து வந்தனர்.

இந்நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்க, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சில ரயில்களில் நிரந்த கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை-எழும்பூரிலிருந்து மதுரைக்குப் பயணப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்சிக்குச் செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

இதில் முதல்கட்டமாக, மதுரையில் இருந்து கிளம்பும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் 7ஆம் தேதி ஒரு பெட்டியும், எழும்பூரிலிருந்து மதுரை கிளம்பும் பாண்டியன் எக்ஸ்பிரஸில் 10ஆம் தேதி ஒரு பெட்டியும் தனித்தனியே இணைக்கப்படுகின்றன.

அதேபோல், சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் எழும்பூரில் இருந்து கிளம்பும்போது, வருகிற 8ஆம் தேதி ஒரு பெட்டியும், திருச்சியில் இருந்து 10ஆம் தேதி ஒரு பெட்டியும் கூடுதலாக இணைக்கப்பட இருக்கின்றன.

மேலும் திருச்சியில் இருந்து கிளம்பும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற 8ஆம் தேதி முதல் ஒரு பெட்டியும், வருகிற 9ஆம் தேதி எழும்பூரிலிருந்து திருச்சிக்கு கிளம்பும் ரயிலில் இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஒன்றும் கூடுதலாக இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே செய்தி வெளியிட்டுள்ளது. இது பயணிகளுக்கு ஓரளவுக்கு சிரமத்தைக் குறைக்கும் என்பது உறுதி.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *