Uகுஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு!

public

குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 9 மற்றும் 14ஆம் தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் முறையே ஜனவரி 7 மற்றும் 22ஆம் தேதி முடிவடைகிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் ஒன்றாகத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் டிசம்பர் 18ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஏ.கே. ஜோதி கடந்த 12ஆம் தேதி அறிவித்தார். குஜராத் தேர்தல் தேதியை அவர் அறிவிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குஜராத்தில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு ஆதரவாகவே தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளதாகப் பலரும் குற்றம்சாட்டினர். பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்திற்காகத்தான் தேர்தல் தேதி தாமதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுவந்தது. இமாச்சலப் பிரதேசத்திற்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை குஜராத்திற்கு ரூ,11 ஆயிரம் கோடி வரையில் திட்டங்களையும் சலுகைகளையும் மாநில அரசு அறிவித்துள்ளது இந்த குற்றச்சாட்டுகளை மெய்ப்பிப்பதுபோல் உள்ளது.

இந்நிலையில், குஜராத் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக இன்று (அக்.25) அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிசம்பர் 9 மற்றும் 14ஆம் தேதி என இரண்டு கட்டமாக குஜராத் தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 9ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும் டிசம்பர் 14ஆம் தேதி 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஜோதி தெரிவித்துள்ளார். 50, 128 மையங்களில் வாக்குப் பதிவு நடைபெறும். இதில், 182 மையங்கள் மகளிர் வாக்குப் பதிவு மையங்களாகும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தலைமைத் தேர்தல் அதிகாரியின் இந்த அறிவிப்பையடுத்து குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *