Kஇன்று பாதிப்பு 5,871: 119 பேர் பலி!

Published On:

| By Balaji

தமிழகத்தில் புதிதாக இன்று 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓமன், கர்நாடகா, கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், பீகார் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த 27 பேர் உட்பட தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 12) 5,871 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதனால்.மொத்த பாதிப்பு, 3,14,520 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று 69 ஆயிரத்து 697 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை மையங்களும் 133 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இன்று 5,633 பேர் உட்பட இதுவரை 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 பேர் கொரோனா தொற்று நோயிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று 119 பேர் உட்பட இதுவரை 5,278 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

**மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்**

சென்னை-993

செங்கல்பட்டு- 439

திருவள்ளூர்-407

காஞ்சிபுரம்- 371

கடலூர்-339

கோவை-294

விருதுநகர்-292

தேனி- 282

ராணிப்பேட்டை-254

சேலம்-217

மதுரை-169

தூத்துக்குடி-157

புதுக்கோட்டை-147

நெல்லை-137

திருச்சி-135

திருவண்ணாமலை-123

குமரி -117

தென்காசி-99

சிவகங்கை-92

விழுப்புரம்-98

திருப்பூர்-80

திருப்பத்தூர்-72

நாகை-72

அரியலூர் -65

ராமநாதபுரம்- 61

தஞ்சை-59

ஈரோடு-49

வேலூர் -45

திண்டுக்கல்-40

கரூர்-40

நாமக்கல்-32

நீலகிரி – 23

பெரம்பலூர்-19

தர்மபுரி -14

கள்ளகுறிச்சி-11

திருவாரூர்- 7

கிருஷ்ணகிரி-6

**கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share