சாத்தான்குளம்: ஜாமீன் கேட்கும், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்!

public

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஜாமீன் கோரியுள்ளனர்.

சாத்தான்குளத்தில் காவல் துறையினர் தாக்கியதில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் உள்பட 5 பேர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் அனைவரும், பாதுகாப்பு கருதி மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர். மேலும், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மற்றும் சம்பவத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ், வெயிலுமுத்து ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் விசாரணையைத் துவங்கிய சிபிஐ, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு காணொலி காட்சி மூலமாக இன்று (ஜூலை 9) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதனிடையே சாத்தான்குளம் ஜெயராஜ். பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார். இருவரும் அடைக்கப்பட்டிருந்த கோவில்பட்டி கிளைச் சிறைக்கு சென்று சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *