Sதிமுகவைக் கிண்டலடித்த ராமதாஸ்

public

கலைஞர் சமாதியில் பஜனைப் பாடல்கள் பாடியதற்காக, திமுகவினரைக் கிண்டலடித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்படப் பல்வேறு தலைவர்கள் சென்னை ராஜாஜி அரங்குக்கு வந்தனர். அண்ணா சதுக்கம் அமைந்துள்ள இடம் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 9ஆம் தேதி முதல் கலைஞர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தப் பிரபலங்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று (ஆகஸ்ட் 21) திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அக்கட்சியினர் கலைஞர் சமாதிக்குச் சென்றனர். அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, ’எங்கள் தலைவரே.. தங்கத் தலைவரே” என்று அவர்கள் பாட்டுப் பாடினர். சிலர் வாத்தியங்களையும் இசைத்தனர். இதுகுறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சமூக வலைதளங்களிலும், இந்த நிகழ்வு குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 22) தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைக் கடுமையாக விமர்சித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். “இதுதான் பெரியார் வழிவந்தவர்களின் பகுத்தறிவுக் கொள்கையோ? வாழ்க பஜனை முன்னேற்றக் கழகம்” என்றும், “கலைஞர் நினைவிடத்தில் திமுகவின் ஒரு பிரிவினர் பஜனைப் பாடல்களை இசைத்ததன் நோக்கம் என்ன தெரியுமா? பஜனையில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக்கருவியின் பெயர் என்ன? இரு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான்!” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

ராமதாஸின் கருத்துக்கு, இதுவரை திமுக நிர்வாகிகள் எவரும் பதில் தெரிவிக்கவில்லை.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *