]தமிழில் புதிய பொழுதுபோக்கு சேனல் !

public

முகேஷ் அம்பானியின் நெட்வொர்க் 18 டிவி நிறுவனத்தில் பங்குகளை வாங்க ஜப்பானின் சோனி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஜப்பானைச் சேர்ந்த பிரபல சோனி நிறுவனம், அதன் துணை நிறுவனமான சோனி என்டெர்டெயின்மெண்ட் டெலிவிஷன் மூலம் இந்திய தொலைக்காட்சி ரசிகர்களை 1995ஆம் ஆண்டு முதல் மகிழ்வித்து வருகிறது. சிஐடி, கிரைம் பேட்ரோல், இந்தியன் ஐடல் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகள் மூலம் இந்திய குடும்பங்களை ஈர்த்து வருகிறது. தொலைக்காட்சியில் இருந்து மக்கள் மொபைல் போனுக்கு மாறியதும் மிகப் பெரிய நிறுவனங்கள் கூட உள்ளடக்கம் சார்ந்த விஷயங்களில் திணறி வருகின்றன என்பதே நிலவரம். அதற்கு உலகப் புகழ்பெற்ற சோனி நிறுவனமும் விதிவிலக்கல்ல.

டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் சமீப ஆண்டுகளில், பொழுதுபோக்கு அம்சங்களை மறுவரையறை செய்துள்ளன. நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற பிளாட்ஃபார்ம்கள் பிராந்திய ரீதியாக மக்களை சென்றடைய உள்ளடக்கங்களை ஒவ்வொரு நாட்டிற்கு, மொழிக்கும் ஏற்றவாறு மாற்றிவருகின்றன. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகின்றது. நெட்பிளிக்ஸ் தற்போது தமிழ் சினிமா இயக்குநர்களை குறிவைத்து தமிழ் ரசிகர்களுக்கான உள்ளடக்கத்தில் படங்களை தயாரிக்க முன்வந்துள்ளன. தொலைக்காட்சியை பொறுத்தவரை ஸ்டார் டிவி, ஜீ, கலர்ஸ் ஆகியவையும் மொழி ரீதியாக உள்ளடகங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில், சோனி நிறுவனம் அதிக மக்கள் தொகை கொண்ட தெற்கு ஆசிய நாடுகளை குறிவைத்து தன்னுடைய போட்டியாளர்களுக்கு சவால் விட முடிவெடுத்துள்ளது.

டோக்கியோவை தளமாகக் கொண்ட இந்நிறுவனம், தற்போது அம்பானியின் நெட்வொர்க் 18 மீடியா & இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பங்குகளை வாங்க விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. நெட்வொர்க் 18 இன் பொழுதுபோக்கு சேனல்களுடன் சோனி அதன் பங்குகளை இணைப்பது உட்பட பல சாத்தியமான ஒப்பந்த கட்டமைப்புகளை பரிசீலித்து வருகிறது. ரிலையன்ஸின் நெட்வொர்க் 18 சானல்கள்: கலர்ஸ், எம் டிவி, காமெடி சென்ட்ரல், வி.எச் 1, நிக்கில்டோன் ஆகியவையாகும். இவற்றுடன் இணைந்து மக்களுக்கு இந்தி, தெலுங்கு, தமிழ் என பிராந்திய ரீதியான உள்ளடகங்களை வழங்க திட்டமிட்டுள்ளது சோனி.

இத்திட்டங்கள் பற்றிய பூர்வாங்கப் பேச்சுவார்த்தை துவக்க நிலையில் இருக்கிறது. அம்பானியின் ஜியோ வழங்கும் இணைய பேக்கேஜ்களால் அதிக வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியான தளம் சிறப்பான முறையில் ஏற்கனவே ரிலையன்ஸ் வசம் இருப்பது கூடுதல் பலம். இதையெல்லாம் கணக்கிட்டு தான் சோனி காய்களை நகர்த்தியுள்ளது.

டிசம்பர் மாத துவக்கத்தில் இது குறித்த முக்கிய பேச்சுவார்த்தை துவங்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில், சோனி அதன் இந்திய ஒப்பந்தங்களை மேம்படுத்தவும், நெட்ஃபிக்ஸ் போன்ற போட்டியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கவும் முடிவெடுத்துள்ளது. அதே நேரத்தில் இது ரிலையன்ஸுக்கு சர்வதேச உள்ளடக்கத்திற்கான வாசல்களையும் திறந்து விட வழிவகுக்கும். இருவருக்குமே லாபம் என்ற கணக்கில் தான் பேச்சுவார்த்தைகள் இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றார்கள்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *