Oகருணாநிதி -கனிமொழி சந்திப்பு!

public

தி இந்து நாளிதழின் தொழிற்சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தி இந்து ஆங்கில நாளேட்டில் தொழிற்சங்கம் தனியாக செயல்பட்டுவருகிறது. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடைபெறுவது வழக்கம். தற்போது நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக எம்பி கனிமொழி வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், செயல்தலைவர் ஸ்டாலின் ஆகியோரையும் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். சந்திப்பின்போது எடுக்கபட்ட புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நீண்ட நாட்கள் கழித்து திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதால் திமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *