Nமாணவர்களை நசுக்கும் ஜிஎஸ்டி!

public

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஓராண்டு ஆகிவிட்ட போதிலும், விளிம்பு நிலைச் சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தொடர்ந்து தொந்தரவளித்து வருகிறது.

உயர்நிலைத் தீர்ப்பாணையத்தின் (Authority for Advance Rulings ) மகாராஷ்டிர அமர்வு வெளியிட்டுள்ள உத்தரவில், மருத்துவம், பொறியியல் மற்றும் இதர நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனங்களும், ஊழியர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் வழங்கும் பயிற்சி வகுப்புகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஒருபுறம், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கும் பயிற்சி வகுப்புகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

வரி விதிப்பின் விளைவாக, பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணங்களை தனியார் பயிற்சி நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதனால், நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மற்றும் தொழிற்கல்வி பெற விரும்புவோர் கடுமையாகப் பாதிக்கப்படுவர். மேலும், கிராமப்புற மாணவர்கள் மற்றும் விளிம்பு நிலைச் சமுதாயங்கள் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் பயிற்சி வகுப்புகளைப் பெற வேண்டிய கட்டாயமும் மாணவர்களுக்கு ஏற்படுகிறது�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *