Mபரிமாறத் தயாராகும் சந்தானம்

public

சந்தானம் நடிக்கும் சர்வர் சுந்தரம் படத்தின் டீசர் நேற்று (ஜூன் 19) வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகரான சந்தானம் கதாநாயகனாகவும் தனது திறமையை வெளிப்படுத்த முழுவீச்சில் இறங்கிவிட்டார். ரசிகர்களிடையே வரவேற்பு இருப்பதால் காமெடி கதாபாத்திர வாய்ப்புகளை ஏற்காமல் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்த நிலையில் வைபவியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்தின் டீசர் வித்தியாசமாக உருவாகியுள்ளது.

நகைச்சுவை நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்த படம் சர்வர் சுந்தரம். நாகேஷ் அந்த படத்தில் நடிகனாக விருப்பம் கொண்டு வறுமை காரணமாக ஹோட்டலில் சர்வராக வேலை செய்வார். அதன்பின் நடிகராக வெற்றி பெற்று அவரது பாதை மாறும். அந்தப் படத்திலிருந்து டைட்டிலை மட்டும் எடுத்துக்கொண்டு சந்தானம் இதை உருவாக்கியுள்ளார். ஏனெனில் படம் முழுக்க சமையல் கலைஞராக சந்தானம் நடிக்கிறார்.

இதற்கு முந்தைய சந்தானம் படங்களில் காமெடியோடு சேர்த்து ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் கத்தியைக் கொண்டு ஸ்டைலாக தக்காளி நறுக்குவது படமாக்கப்பட்டுள்ளது. அதோடு வைபவியின் காட்சியும் டீசரில் இடம்பெற்றுள்ளது.

கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஆனந்த பால்கி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜூலை 6ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

[சர்வர் சுந்தரம் டீசர்](https://www.youtube.com/watch?time_continue=1&v=VbxxZ9ZQxwU)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *