Mஅவசியமான அப்டேட்: வாட்ஸ் அப்!

public

{

கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வாட்ஸ் அப் அப்ளிகேஷன் ,முதலில் சாதாரண குறுஞ்செய்திகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் வெளியானது. அதன் பின்னர் புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்றவை ஆனுப்ப சில அப்டேட்கள் வெளியானதும் பயனர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் வளர்ச்சி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பேஸ்புக் நிறுவனத்துடன் சேர்ந்ததில் இருந்து அதிகரித்துக் காணப்பட்டது. அதனால் உலகின் முன்னணி அப்ளிகேஷன்களில் ஒன்றாகவும் இந்த வாட்ஸ்அப் தற்போது திகழ்ந்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் சுமார் 200 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப் அதன் பயனர்களைத் தக்க வைத்துக் கொள்ள அவ்வப்போது ஏதேனும் அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. அதன்படி கடந்த மாதம் சோதனை ஓட்டமாக வெளியிடப்பட்ட அப்டேட் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பயனர்கள் இனி MP3, AVI video, APK files போன்ற அனைத்து வகையான பைல்களையும் அனுப்ப முடியும் . இதுவரை அனைத்து புகைப்படங்கள், MP4 வீடியோக்கள் மற்றும் PDF பைல்களை மட்டுமே அனுப்ப முடியும். அதிலும் குறைந்த அளவுள்ள பைல்களை மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் இந்த புதிய அப்டேட் மூலம் பல்வேறு விதமான பைல் பார்மெட்களை 100MP வரையிலும் சேர் செய்ய முடியும். பல்வேறு பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களின் மூலமே பைல்களை பெரும்பாலும் சேர் செய்கின்றனர் என்பதால் இந்த புதிய வசதி பெரும் பயனுள்ளதால் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *