jஇந்தியாவின் உலகக்கோப்பை கனவு கலைந்தது!

public

17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், இந்திய அணி, 0-4 என்ற புள்ளிகள் கணக்கில் கானா அணியிடம் படுதோல்வி அடைந்தது.

டெல்லியில் நேற்று (அக்டோபர் 12) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். இந்திய அணி அதிக கோல் கணக்கில் வென்றால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது. 43 வது நிமிடத்தில் கானா அணியின் எரிக் முதல் கோலை அடித்தார். முதல் பாதி முடிவில் கானா அணி 1-0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதி தொடங்கியவுடன் 52வது நிமிடத்தில் எரிக் மீண்டும் ஒரு கோல் அடிக்க கானா அணி, 2-0 என வலுவான நிலையில் இருந்தது. அதைத் தொடர்ந்து 86 மற்றும் 87வது நிமிடங்களில் முறையே டான்சோ மட்டும் டோகு கோல் அடிக்க, கானா அணி 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோற்ற இந்திய அணி, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

நவி மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் கொலம்பியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இதன்மூலம் கொலம்பியா, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

“ஏ’ பிரிவில் கானா அணி முதலிடத்தையும், அமெரிக்கா 2வது இடத்தையும் பிடித்தன. இவ்விரு அணிகளும் தலா 6 புள்ளிகளைப் பெற்றபோதிலும், கோல்கள் அடிப்படையில் கானாவுக்கு முதலிடம் கிடைத்தது. கொலம்பியா 3-ஆவது இடத்தைப் பிடித்தது. இந்தியா புள்ளி ஏதுமின்றி கடைசி இடத்தைப் பிடித்தது.

இத்தொடரில் முதன் முதலாகக் களமிறங்கிய இந்திய அணி, மூன்று ஆட்டங்களிலும் சிறப்பான தடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்தியது. இந்தத் தொடரில் தோல்வியடைந்தாலும், எதிர்காலத்தில் இந்தியாவிற்குச் சிறந்த வீரர்கள் உருவாக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *