hநமக்கு ரெண்டு முதல்வரா? -அப்டேட்குமாரு

public

‘பாமக ஆட்சி அமைக்க கவர்னர் கூப்பிடுவார்’ என ராமதாஸ் பேசியது, ‘மே 19 மதுரையில் முதல்வராக பதவியேற்பேன்’ என கேப்டன் பேசி மெர்சலாக்கியது, கரூரில் பெருமளவில் பணம் சிக்கியது மற்றும் தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் குறித்து நெட்டிசன்களின் கருத்துக்கள்

// @ss_athish

பாமக ஆட்சி அமைக்க 20 தேதி அன்புமணியை கவர்னர் அழைப்பார் – ராமதாஸ் # இவங்ககிட்ட சிக்கிட்டு பொதுமக்கள் படாதபாடு படுறாங்க //

//@RameshTwts

மதுரையில் மே 19-ம் தேதி முதல்வராக பதவியேற்பேன் – விஜயகாந்த்

# 20-ம் தேதி அன்புமணி முதல்வராக பதவியேற்பேன்னு சொல்றார்?

அப்போ நமக்கு ரெண்டு முதல்வரா? //

// @arutperungo

தமிழகத்தின் விநியோக மையமாக கரூர் இருப்பதற்கான காரணம், கரூரிலிருந்து தமிழகத்தின் எந்தப்பகுதிக்கும் 6 மணிநேரத்தில் பயணிக்கலாம் //

//@blackhawk3271

25 நாட்களுக்கு பிறகு அன்புமணியால் புதிய தமிழகம் உருவாகும் – ராம்தாஸ் # அப்போ ஏற்கனவே இருக்கற ‘புதிய தமிழகம்’ கட்சியை என்ன பண்ண? //

//‏@naaraju

கேப்டன் இப்பல்லாம் ரொம்பக் குழறுதுன்னு திருமா பெயரைச் சொல்றதே கிடையாது. நேரடியா மொட்டையா அன்பு நண்பருக்கு மோதிரம் சின்னம்ன்னு சொல்லிடுறது.//

//@ConGainer

தேர்தல்வரை அதிமுக-வின் கொடுமைகள் தொடரும் நிலையிலும் திமுக-வுக்கு வாக்களிக்க தயக்கம் ஏற்பட கலைஞருடன் தயாநிதிமாறன் இருக்கும் போட்டோ போதுமானது //

//@thoatta

குடிக்கிறது தண்ணிய ஃப்ரிஜ்ல வச்சது போய், குளிக்கிறதுக்கு தண்ணிய ஃப்ரிஜ்ல வைக்கணும் போல//

// @Apallava

திமுக டப் கொடுக்குது

சென்னை அமிர்தா விளம்பரத்துக்கு //

//@Sakthivel_twitt

நல்லவேளை தேர்தல் 5 வருசத்துக்கு ஒருமுறை வருது… இல்லனா எல்லா கட்சி விளம்பரமும் சென்னை அமிர்தா விளம்பரத்த டார்ச்சர்ல தோக்கடிச்சிருக்கும் //

//@stanley469

சென்னை வெயில கூட தாங்கிடலாம் போல…

இந்த சென்னை அமிர்தா விளம்பரத்த மட்டும்…

அடேய் நீங்கலாம் நல்லா வரணும்டா 😉 //

// ‏@Iam_SuMu

இனி அந்தம்மா வெளியே வரும்போது நமீதா சாஷ்டாங்கமா விழுந்து கும்பிடும்ல, திஸ் ரரக்கள் லக்கி பெல்லோவ்ஸ்//

// ‏@mugathirai

என் வீடு சென்னையில தான், ரேஷன் கார்ட் சென்னையில தான், ஓட்டும் சென்னையில தான். – நமீதா. # கட்சியும் எனக்கு தான்னு சொல்ல போகுது!//

// நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

நான் ஈ படம் சன் டிவி-ல ஓடிக்கிட்டு இருக்கு…‘நான்தான் நானி’ அப்படின்னு சமந்தாகிட்ட ஈ தண்ணிய வச்சு எழுதி காட்டுது …

இங்கிலீஷ்ல எழுதாம தமிழ்ல எழுதுறத பாக்கும்போது…. முன்னாட்களில் ஈக்கள் கூட தமிழைதான் பயன்படுத்தி இருக்க வேண்டுமென்று தெரிகிறது. இன்னும் சிறிது ஆய்வு செய்து பார்த்தால் தமிழ் தேசியத்தின் முப்பாட்டன் ஒரு ஈ யாக இருக்க கூட வாய்ப்புள்ளது என வியக்கிறேன்.//

// வா.மு. கோமு

சுப்பிரமணி கால்கட்டுகளுடன் மருத்துவமனையில் கிடந்தான். பழனிச்சாமி அவன் அருகில் முகத்தை தொங்க வைத்து அமர்ந்திருந்தான்.

– நேத்து நடந்தது ஞாவகம் இருக்கா சுப்பிரமணி?

– இல்லியே! இங்க ஏன் கிடக்கேன் நானு? காலு அவுட்டு போல?

– டாஸ்மார்க் பார் சுவத்துல ஏறி எல்லோருக்கும் பறந்து காட்டுறன்னு சொல்லி ஏறிட்டேடா நீ!

– என்னை தடுத்து தொலஞ்சிருக்கலாம்ல நீ?

– நானும் உங்கூட சேர்ந்து தான குடிச்சேன் முட்டாள்! ஒருவேளை நெசமாவே பறந்துடுவியோன்னு நெனச்சிட்டேன்!//

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *