gஇணையத்தில் வலம்வரும் ‘சென்னை மன்னன்’!

public

நடிகர் அம்சன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

‘மானசீகக் காதல்’ என்னும் படத்தின் வாயிலாக அறிமுகம் ஆனவரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகனுமானவர் ஹம்சவர்தன். புன்னகை தேசத்தில் நடித்திருந்த அவர், அதன்பின்னர் மம்மூட்டியுடன் இணைந்து ‘ஜூனியர் சீனியர்’ எனும் படத்திலும் நடித்தார். சமீப காலமாக அதிகமாகப் படங்களில் தலைகாட்டாத அவர் ‘அம்சன்’ எனத் தனது பெயரை மாற்றிய நிலையில் ‘பீட்ரு’ எனும் படத்தில் தற்போது நடித்துவருகிறார்.

சாருஹாஸன் நடிக்கும் ‘தாதா 87’ பட இயக்குநரான விஜய்ஸ்ரீ ஜி இதை இயக்குகிறார். ‘அம்சன் ஃபிலிம் ஃபேக்டரி’ இதைத் தயாரிக்கிறது. கதாநாயகனாக நடிக்கும் அம்சன் இந்தப் படத்தில் அஜித் ரசிகராக நடிக்கவிருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தப் படத்திலிருந்து வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம்பெற்றுள்ளது. “சென்னை மாநகரத்தின் ‘மா’ மன்னன் பீட்ரு வீர வரலாறு” என்னும் வாசகம் இந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *