’கடவுளின் செயல்’: கடனை செலுத்த அவகாசம் கேட்கும் நிறுவனங்கள்!

public

இந்திய பொருளாதாரம் ஏற்கனவே மந்த நிலையில் இருக்கிறது. தற்போது கொரோனா பாதிப்பால் பல தொழில் துறைகளும் முடங்கியுள்ளதால் பொருளாதாரம் மேலும் பாதிக்கும் நிலையில் இருக்கிறது. இந்திய வங்கிகளைப் பொறுத்தவரை வாராக் கடன் உள்ளிட்ட பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் ரியல் எஸ்டேட், ஹாஸ்பிடாலிட்டி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள், கொரோனா பாதிப்புள்ள இந்த சூழலில் வர்த்தகம் குறைவாக உள்ளது. இது கடவுளின் செயல் (god of act) என்பதால் கடனுக்கான தவணையைச் செலுத்தக் கூடுதல் அவகாசமும், பழைய கடனை மறுசீரமைப்பு செய்யவும் வங்கிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுவாக ஒரு இயற்கை பேரழிவு, தொற்றுநோய் அல்லது போரினால் வணிகம் பாதிக்கப்பட்டுள்ள தீவிர சூழ்நிலைகளில் வர்த்தகம் பாதிக்கப்பட்டால் god of act விதிமுறை பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் god of act பிரிவில் ரியல் எஸ்டேட் ,ஹோட்டல் நிறுவனங்கள், சுற்றுலாத் துறை தொடர்பான தொழில் நிறுவனர்கள் தங்களுடைய கடன் ஒப்பந்தத்தில் உள்ள இயற்கை நிகழ்வுகளுக்கான விதியை சுட்டிக்காட்டி கடன் தவணையைத் திருப்பி செலுத்தக் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளதாக தி எக்னாமிக் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

“கடன்களை மறுசீரமைப்பதற்குப் பல நிறுவனங்களிடம் இருந்து எங்களுக்குக் கோரிக்கைகள் வந்தது. இந்தக் கோரிக்கைகளில் பெரும்பாலானவை 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் மதிப்புடையவை ” என்று வங்கித் தரப்பில் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வங்கிகளுக்குக் கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கி கடனை எப்படிக் கையாளுவது என்பதற்கான வழிமுறையை விரைவில் தெரிவிக்கும் என்று வங்கி பணியாளர்கள் எதிர்பார்ப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் முழு அடைப்பு செய்யப்பட்ட நிலையில் நாட்டின் முக்கியமான தொழில் அமைப்புகளுக்கு ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு தாராளமான உதவிகளை வழங்க வேண்டும் என்று தொழில் துறை வட்டாரங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ICRA எனப்படும், தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் தகவலின்படி, மொத்த நிதி அடிப்படையிலான விமானத் துறைக்கு மட்டும் இந்திய வங்கிகளில் உள்ள கடன் மதிப்பு (ஜெட் ஏர்வேஸ் கடன் மற்றும் குத்தகைகளின் மூலதன மயமாக்கல் தவிர) சுமார் ரூ .40,000 கோடியாக உள்ளது.

ஆனால் 2020 ஆம் ஆண்டில் உலகளவில் விமான வருவாய் 2019 ஆம் ஆண்டை விட 44 சதவிகிதம் குறைந்து விடும் என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி பிப்ரவரியில் தொற்று நோய் அச்சுறுத்தலால், உலகளவில் விமானத் துறையின் இழப்பு 113 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோன்று, ஹோட்டல், உணவகம் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு இந்திய வங்கிகள் சுமார் 45,394 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளது. ரியல் எஸ்டேட் துறைக்கு ரூ .2.27 லட்சம் கோடி வழங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் , ஹோட்டல், உணவகம் சார்ந்த வர்த்தகம் 2021ஆம் நிதியாண்டில் 15 முதல் 20 சதவீதம் வரையில் பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ” பொருளாதார நெருக்கடியின் முடிவு கொரோனா வைரசால் ஏற்படும் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. எனவே இந்த நெருக்கடி நேரத்தில் கடன் வாங்குவோர், வங்கிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் ஒருவருக்கொருவர் உதவத் தாராள மனதுடன் முன்வருவது மிகவும் முக்கியமானது, ”என்று சட்ட நிறுவனமான எஸ்.என்.ஜி நிர்வாக பங்குதாரர் ராஜேஷ் நரேன் குப்தா கூறியுள்ளார்.

**கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *