f‘ஹாய் மோட்டோ’: ஒரு நாயகன் உதயமாகிறான்!

public

‘புதிதாக வந்தால் தானே உதயமாவதாகக் குறிப்பிடவேண்டும். ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கும் மோட்டோ நிறுவனத்தை உதயமாவதாக எப்படிச் சொல்லலாம்’ என சிலர் சண்டைக்கு வரக்கூடும். அஸ்தமிக்கும் சூரியன் மட்டுமே உதயமாகும். அதுபோல, ஸ்மார்ட்ஃபோன் போட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மோட்டோ நிறுவனம் மீண்டும் தன்னைப் போட்டிப் பாதையில் செலுத்தும்போது ‘உதயமாகிறது’ எனக் குறிப்பிடுவது தான் சரி.

மோட்டோ நிறுவனத்துக்கு 2018ஆம் வருடம் சரியில்லை என்று ஆரூடம் சொல்லக்கூடும். ஆனால், தனது பொருட்களை தரம் குறையாமல் கொண்டு சென்று பயனாளர்களிடம் சேர்ந்த பெருமையை மோட்டோ எப்போதும் பெற்றிருப்பதை மறக்கமுடியாது. அப்படி மறக்கும் வகையில் அடுத்தடுத்த ஸ்மார்ட்ஃபோன்கள் வருவதற்குள் தனது ‘கனவுத் திட்டம்’ என்னவென்பதை மோட்டோ நிரூபித்துவிட்டது.

மோட்டோ அறிமுகப்படுத்தவிருக்கும் MOTO Z4 ஸ்மார்ட்ஃபோனில், ஸ்னேப்டிராகன் சிப்செட்டின் அதி அற்புதமான ஸ்னேப்டிரேகன் 8150 மாடலை அறிமுகப்படுத்துகிறது மோட்டோ நிறுவனம். 2019ஆம் ஆண்டு பலரும் எதிர்பார்க்கும் 5G வசதியுடன் வெளியாகும் முதல் மாடலாக இது இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஜனவரியிலேயே வெளியிடப்படும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *