eபாஜக புயல் கண்டு அகிலேஷ் அஞ்சுகிறார்!

public

உத்திர பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருப்பதை தாக்கி பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.

அலிகாரில் நடந்த கூட்டத்தில் பேசிய மோடி, “2014 ஆம் ஆண்டு (பிரதமர் வேட்பாளராக) நான் இங்கு வந்த போது, இதில் பாதி கூட்டம் கூட இல்லை. ஆனால் இன்று இங்கு என் முன் காவி கடல் இருக்கிறது. காற்று வேகமாக அடிக்கும் போது இளம் தலைவரால் கூட ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு பிடித்துக் கொள்ள கம்பம் தேவைப்படும். இப்போது அது பாஜக புயல்..இதனால் பறந்து சென்று விடுவோம் என முதல்வர் அகிலேஷ் யாதவ் அஞ்சுகிறார். உத்திர பிரதேச மக்களுக்கு நீதியும் மாற்றமும் வேண்டும்” என்றார்.

எதிர்கட்சியை தாக்கி பேசிய மோடி, “ கடுமையான நடவடிக்கைகள் எடுத்து பணத்தை சேமிக்க நாங்கள் வேலை செய்கிறோம். இதனால் அவர்களுக்கு கோபம் வராதா? இதனால் மோடியை வீழ்த்த அவர்கள் ஒன்று திரண்டு வர மாட்டார்களா? அவர்கள் தனியே இருந்தால் மோடிக்கு மேலவையில் பெரும்பான்மை கிடைத்து விடும், திருடர்களுக்கும் ஊழல் வாதிகளுக்கும் எந்த உதவியும் கிடைக்காது. இதுவே அவர்களுடைய பயம்” என உரையாற்றினார்.

“உத்திர பிரதேசத்தில் இருந்த அரசுகள் முறையே மின்சாரம் வழங்காததால் பூட்டு தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் நாங்கள் இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் மின்சாரம் வரவழைக்க வேலை செய்கிறோம்” என்று பேசி வாக்கு சேகரித்தார் மோடி.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *