dபிரபு தேவாவின் செல்ல இயக்குநர் விஜய்

public

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுப்பவர் இயக்குநர் விஜய். ‘மதராசபட்டினம்’ திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியவர் தற்போது ஜெயம் ரவியை வைத்து ‘வனமகன்’ என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இதன் போஸ்டர் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட காலமாக நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்த பிரபு தேவா, விஜய் இயக்கிய ‘தேவி’ படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் தனது Prabhu Deva Studios நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கவும் செய்தார். ‘தேவி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளார்கள். இந்த திரைப்படத்தையும் பிரபு தேவாதான் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்திருக்கும் ‘’Eng Mung Sung’ திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதன்பிறகு விஜய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *