dஅமமுகவினர் கைதுக்கு அமைச்சரே காரணம்!

public

கோவையில் அமமுகவினர் 56பேர் கைது செய்யப்பட்டதற்கு அமைச்சர் வேலுமணியின் தூண்டுதலே காரணம் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையை அடுத்த வடவள்ளிப் பகுதியில் கடந்த 17ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின் வெளியே வந்தவர்கள் மீது அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக அமமுகவினர் குற்றம் சாட்டினார். இதைக் கண்டித்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் மறியலில் ஈடுபட்ட 56பேரைக் கைது செய்தனர். அவர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், இவர்கள் அனைவரும் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை இன்று (மே 21) சிறையில் சந்தித்த தினகரன் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் கட்சியினர் 56பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர் . முதலில் திருமண மண்டபத்தில் எங்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற இருந்துள்ளது. ஆனால் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று பேரூர் டிஎஸ்பி வேல்முருகன் என்பவர் தடுத்துள்ளார். இதனால் பகுதிக் கழக செயலாளர் இல்லத்தில் கூட்டம் நடந்துள்ளது. அதில் கலந்துகொண்டு திரும்பிய எங்கள் கட்சியினரின் வாகனங்களை வேலுமணியின் ஆதரவாளர்கள் அடித்து உடைத்ததால்தான் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறினால், தேவையில்லாமல் எங்கள் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலஞ்சர் துரை உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்துள்ளனர். இதனை அமைச்சர் வேலுமணியின் துண்டுதலில் அல்லாமல் வேறு யாரின் துண்டுதலில் செய்திருக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

“இப்படி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல் துறையினரை நாங்கள் விட மாட்டோம். எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. நிச்சயம் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்றும் தெரிவித்தார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *