cஜி.எஸ்.டி: 8 சதவிகித வளர்ச்சி கிட்டுமா?

public

‘நாடு முழுவதும் வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் இந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த வளர்ச்சி அதிகரிக்கும்’ என்று மத்திய அரசு கூறி வருகிறது.

மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வரும் பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து முன்நோக்கிச் செல்கிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் தவ் ஜாங் கூறுகிறார்.

மேலும் வரும் ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (GST) நடைமுறைப்படுத்தப்பட்ட பின் இந்த நிதியாண்டில் இடைப்பகுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார். மேலும், நாங்கள் செய்து வருகின்ற வேலைகளால் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்; எதிர்காலத்தில் இந்தியா உயர்ந்த வளர்ச்சியைப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தவ் ஜாங் கூறினார்.

உலக பொருளாதாரச் சந்தையில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதன்மூலம் வலிமையான பொருளாதார வளர்ச்சியை இந்தியா பெற்று வருகிறது. கடந்த 2016-2017ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவிகிதமாக இருந்தது. இந்த நிதியாண்டில் (2017-2018) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருக்கும். GST அமல்படுத்தப்பட்ட பின் 8 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர வாய்ப்புள்ளது.

உலக அளவில் எண்ணெய் விலை குறைந்ததால் பணவீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவியது. மேலும் நிதிக்கொள்கைகள் மற்றும் நாணயக்கொள்கைகள் போன்றவை இந்தியப் பொருளாதாரத்தை சரியாமல் பாதுகாக்க உதவியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை மந்தமாக்கியது. ஆனால், முன்னதாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் அதிலிருந்து மீண்டு வர முடிந்தது என்று தவ் ஜாங் கூறினார்.

தவ் ஜாங் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் நாள் சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்னதாக 1995 முதல் 1997 வரை உலக வங்கியில் பணி புரிந்தார். 1997 முதல் 2004ஆம் ஆண்டு வரை ஆசிய மேம்பாட்டு வங்கியிலும் பணி புரிந்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *