cஓட்டுக்காகவே என்னைத் தேடுகிறார்கள்!

public

இந்திய அரசானது ஓட்டுகளைப் பெறுவதற்காகவே தன்னை இந்தியாவுக்குக் கொண்டுவர விரும்புவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

கிங்ஃபிஷர் தொழிலதிபர் விஜய் மல்லையா 2016ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திலேயே நாட்டை விட்டுத் தப்பியோடிவிட்டார். இங்கிலாந்தில் வசித்து வரும் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதோடு, அவரது இந்திய, வெளிநாட்டுச் சொத்துகள் இந்திய அரசால் முடக்கப்பட்டு வருகின்றன. இந்திய வங்கிகளிடம் அவர் பெற்ற ரூ.9,000 கோடிக்கு மேலான கடனை வசூலிக்க அவரது சொத்துகளை விற்பனை செய்யும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. மேலும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அவரை நாடு கடத்தி இந்தியாவுக்குக் கொண்டுவரும் முனைப்பில் இந்திய அரசு உள்ளது. அவரை வைத்து இந்திய அரசு அரசியல் செய்து வருவதாகவும் அவர் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் பிரிட்டிஷ் ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் ஃபோர்ஸ் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளராக உள்ள அவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “என்னுடைய பெயரில் உள்ள சொத்துகளை ஒப்படைப்பதாகப் பிரிட்டிஷ் நீதிமன்றத்திடம் நான் ஒப்புக்கொண்டுள்ளேன். ஆனால் என்னுடைய குழந்தைகள் பெயரிலும், என்னுடைய அம்மாவின் பெயரிலும் உள்ள சொத்துகளைக் கைப்பற்ற யாருக்கும் உரிமை இல்லை. என்னுடைய கார்கள், நகைகள் உள்ளிட்ட சில பொருட்களைக் கைப்பற்ற நான் ஒப்புக்கொண்டேன். என்னுடைய வீட்டைக் கைப்பற்றவும் நான் இசைந்துள்ளேன். நான் வைத்திருந்த சொகுசுக் கப்பலைக் கேட்கிறார்கள். அதை நான் விற்றுவிட்டேன். அது என்னுடையதல்ல. வருடத்துக்கு ஒரு மாதம் மட்டுமே நான் பயன்படுத்த அதன் சொந்தக்காரர் அனுமதி வழங்கியிருந்தார்.

நான் பெற்ற கடனை விட இரண்டு மடங்கு அதிகமான சொத்துகளை கர்நாடக நீதிமன்றத்தின் முன் வைத்துள்ளேன். எனவே எனது சொத்துகளைக் கைப்பற்றுவதற்கான கேள்வியே தேவையில்லை. இந்தியாவில் உள்ள என்னுடைய அனைத்துச் சொத்துகளையும் விற்பனை செய்து வருகிறார்கள். மறுபுறமோ நான் வாங்கிய கடனுக்குரிய வட்டியை வங்கிகள் உயர்த்திக் கொண்டே செல்கின்றன. என்னுடைய அப்பாவுக்குச் சொந்தமான பழமையான சொத்துகளை அமலாக்கத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது நியாயமில்லை. நான் எப்போதுமே இங்கிலாந்தில் வசிப்பவன்தான். பின்னர் நான் ஏன் இந்தியா திரும்ப வேண்டும் என்று கேட்கிறார்கள்? என்னை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். இந்தியாவில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் என்னை இந்தியாவுக்குக் கொண்டு வந்து, புனிதமான சிலுவையில் தொங்கவிட்டு, அதைக் காட்டி ஓட்டுகளைப் பெறப் பார்க்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *