bஎண்ணெய் கசிவு : விசாரணைக்கு உத்தரவு!

public

சென்னை கடல்பகுதியில் எண்ணெய் கசிவு விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என்று கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னை அருகே உள்ள எண்ணூர் துறைமுகத்துக்கு கடந்த 28-ஆம் தேதி கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலும், எரிவாயு ஏற்றி வந்த கப்பலும் வந்தடைந்தது. துறைமுகத்திற்குள் செல்வதற்கான அனுமதிக்காக அந்த கப்பல்கள் துறைமுகத்துக்கு அப்பால் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது இரு கப்பல்களும் மோதிக்கொண்டன. இதில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சேதம் அடைந்து அதில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்து பெருமளவிலான மாசுவை ஏற்படுத்தியது.

எண்ணூர் தொடங்கி திருவொற்றியூர், ராயபுரம், மெரீனா, சாந்தோம், பெசன்ட்நகர், திருவான்மியூர் நீலாங்கரை என கிழக்கு கடற்கரை வரை எண்ணெய் படலம் பரவி மாசு ஏற்படுத்தியுள்ளது. இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. எண்ணெய் படலம் காரணமாக அரிய வகை ஆமைகள், மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இறந்து மிதக்கும் நிலையும் காணப்படுகிறது. உயிரினங்கள் இறந்துள்ள நிலையில் கடல் நீர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எண்ணெய் அகற்றும் பணியில் தேவையான உதவிகளை தமிழக அரசுக்கு செய்யும்படி இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தவிர கடலோர காவல் படைவீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோருடன் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்களும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 104 டன் எண்ணெய் படலம் அகற்றப்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் இருந்து 2 நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு எண்ணெய் படலத்தை உறிஞ்சும் பணி நடைபெற்று வருகிறது.

எண்ணெய் கசிவு காரணமாக சென்னை துறைமுகத்திற்கு கப்பல்கள் வந்து செல்வதில் எந்த பிரச்னையும் இல்லை என சென்னை துறைமுக தலைவர் ரவீந்திரன் தெரிவித்து உள்ளார். இந்நிலையில், சென்னையில் கடல்பகுதியில் எண்ணெய் கசிவு விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என கப்பல் போக்குவரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. சென்னையில் கடற்பரப்பில் படிந்துள்ள எண்ணெய் இன்னும் 2 நாட்களில் அகற்றப்படும் என கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “விபத்தின்போது 10,000 டன் எண்ணெயில் 20 டன் எண்ணெய் கடலில் கலந்து உள்ளது. எண்ணெய் கசிவு விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும், முதற்கட்ட அறிக்கையானது கப்பல் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. எண்ணெய் கசிவு தொடர்பாக முழு விவரம் கிடைக்க ஒருமாதம் ஆகும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வல்லூநர்கள் குழு மேற்பார்வையில் எண்ணெய் படலம் அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *